தேர்தல் நெருங்கும் முன்பே அரசியலில் தனது அனுபவத்தை பயன்படுத்தி அனைத்து கட்சிகளுக்கும் முன்னோடியாக வேலை பார்த்து வரும் ஸ்டாலின் தலைமையிலான திமுக அணி. தொடர்ந்து இரண்டாவது முறையாக தேர்தலில் வெற்றி பெற்று மக்களின் முதல்வராக தன்னை நிரூபிக்க கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக அரசு அறிவித்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றி மக்களின் நன்மதிப்பை ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பெற்றுள்ளது.
பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், எதிர்க்கட்சிகளால் கொடுக்க முடியாது என்ற கூறிய மகளிர் காண மாதம் ஆயிரம் ரூபாய் கொடுத்து தமிழ்நாடு மட்டும் இல்லாமல் இத்திட்டத்தை பயன்படுத்தி இந்தியாவில் பிற மாநிலங்களும் மகளிர்க்காக ஆயிரம் ரூபாய் கொடுத்து வருகிறது. இந்தியாவிலேயே அனைத்து மாநிலங்களுக்கும் முன்னோடியாக தமிழகம் திகழ்கிறது.
மகளிர் காண ஆயிரம் ரூபாய் பணம் தேர்தல் காலத்தில் தடைபடாமல் இருப்பதற்கு தனது ராஜதந்திர நடவடிக்கையாக முன்கூட்டியே மக்களுக்கு 5000 ரூபாய் அறிவித்து. கோடைகால சிறப்பு நிதியாக 2000 ரூபாய் அறிவித்து மக்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியுள்ளார்.
மற்ற கட்சிகள் திமுகவின் கூட்டணியில் அதிக கட்சிகள் இருப்பதால் அவர்களின் தொகுதி பங்கிட்டில் இழுபறி ஏற்படும் மற்றும் கூட்டணி உடையும் என எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த நேரத்தில் அனைத்து கட்சிகளையும் சரியாக வழி நடத்தி அவர்கள் விருப்பப்படியே கூட்டணியில் தொகுதி பங்கிட்டை வெற்றிகரமாக முடித்துள்ளார்.
ஸ்டாலின் தலைமையிலான கூட்டணி கட்சிகள் ஒருங்கிணைத்து தேர்தலை சந்திப்பது உறுதியான நேரத்தில். மத்தியில் ஆட்சி செய்யும் கட்சியுடன் கூட்டணி வைத்துள்ள ADMK கட்சி நிர்வாகிகளை மத்திய ஆளும் கட்சியின் நிர்வாகிகள் தமிழ்நாட்டிற்கு வந்து சந்திப்பதை தவிர்த்து வருகிறார்கள். தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் இந்த முறையும் ஆட்சியை கைப்பற்றுவது உறுதி என்று,
உளவுத்துறை மூலம் உறுதிப்படுத்திக் கொண்ட மத்திய அரசு தேர்தலில் அதிக ஈடுபாடு காட்டாமல் இருந்து வருகிறார்கள்.
எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக கட்சியின் வாக்குகளைப் பிரித்து இந்த தேர்தலில் பிஜேபியின் தாமரைச் சின்னத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணி கட்சிகளை நிற்க வைத்து தமிழ்நாட்டில் தங்களது கட்சியின் வாக்கு சதவீதத்தை அதிகப்படுத்தி தமிழ்நாட்டின் மூன்றாவது பிரதான கட்சியாக பிஜேபியை முன்னிறுத்த மறைமுக வேலையை செய்து வருகிறார்கள்.
சீமானின் நாம் தமிழர் கட்சி எந்தக் கூட்டணிக்கு உள்ளும் செல்லாமல் தேர்தலில் தனக்கான தனித்துவத்தை இந்தத் தேர்தலிலும் நிரூபித்து வருகிறது. இந்தத் தேர்தலில் சீமானின் நாம் தமிழர் கட்சி மேலும் வாக்குகளை பிரித்தால் அடுத்துவரும் தேர்தலில் நாம் தமிழர் கட்சி மிகப்பெரிய மிகப்பெரிய உயரத்தில் மக்கள் அமர வைப்பார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

