எம்ஜிஆருக்கு பிறகு அதிக ரசிகர்களைக் கொண்ட நடிகராக ரஜினி இருந்தார். ரஜினி அரசியலுக்கு வராமல் சினிமாவில் தொடர்ந்து பயணித்து வந்தார். இதற்கிடையில் சினிமாவில் இருந்து ராமராஜன், கார்த்திக், சரத்குமார், பாக்கியராஜ், டி.ராஜேந்திரன், விஜயகாந்த்,கமல் போன்றவர்கள் அரசியலில் வந்து,
பெயர் சொல்லும் அளவிற்கு சாதிக்க முடியாமல் சென்றார்கள்.சிலர் ஜாதி கட்சிகளாக செயல்பட்டு வந்தார்கள். சிலர் எம்ஜிஆரின் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு எம்ஜிஆர் பார்த்து நாங்கள் அரசியலுக்கு வந்தோம் அவர் பின்னால் செல்கிறோம் என அவரது கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டு. அவரால் தற்போது வரை அரசியலில் இருந்து வருகிறார்கள்.
ரஜினி தமிழ்நாட்டில் தனது படங்களை ஓட வைப்பதற்காக அரசியலை ஒரு ஆயுதமாக பயன்படுத்தி வந்தார். ஒரு கட்டத்தில் தான் அரசியல் கட்சி ஆரம்பிக்க போவதாகவும் தமிழ்நாட்டில் சிஸ்டம் சரியில்லை என்று கூறி. கலைஞரிடம் ஆசி வாங்கி சென்றார். பிறகு உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சேர்ந்து ஒரு அறிக்கை வெளியிட்டார் தனது உடல் நிலையை காரணம் காட்டி அரசியலில் தொடரப் போவதில்லை என்றும்.தனது கட்சியை ஆரம்பிக்கும் முன் கட்சியை கலைத்து விட்டு மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார்.
தற்போதைய அரசியல் சூழ்நிலையை முன்கூட்டியே கணித்திருந்தால் ரஜினி அவ்வாறு செய்திருக்க மாட்டார்.
விஜயின் அரசியல் எழுச்சி அனைத்து அரசியல்வாதிகளுக்கும் ஒரு பயத்தை காட்டிவிட்டது. எம்ஜிஆருக்கு பிறகு சினிமாவிலிருந்து வந்து அரசியலில் ஜெயித்து விடுவார் என்று ஆளுங்கட்சிகளும் எதிர்க்கட்சிகளும் பயந்து வரும் வேளையில் மூன்றாவதாக ரஜினிக்கும் ஒரு பயத்தை அவர் காட்டிவிட்டார். அதன் வெளிப்பாடு இளையராஜா பாராட்டு விழாவில் ரஜினியின் கீழ்த்தரமான அரசியல்.
விஜயின் திருச்சி கூட்டத்தை காட்டிலும், இளையராஜா பாராட்டு விழாவில் தன்னுடைய பேச்சுக்கள் அதிக ஊடகங்களில் சென்று சேர வேண்டும். இதற்காக இசைஞானி இளையராஜா அவர்களின் பாராட்டு விழாவில் அவரைப் பற்றி அவதூறாக இளையராஜா மது குடித்துவிட்டு நடனம் ஆடினார் நடிகைகளை பற்றி அந்தரங்க விஷயங்களை கேட்டார் என்று தன்னுடைய கால்புணர்ச்சியை வெளிக்காட்டினார்.
இதனை முன்கூட்டியே உணர்ந்த இசைஞானி இளையராஜா தன் ரஜினியுடன் மது அருந்தியதை மேடையில் தெரிவித்தார், இருந்தாலும் இவர் மேடைக்கு சென்று நடிகைகளின் அந்தரங்களை பற்றி பேசினோம் என்று சம்பந்தமில்லாமல் கூறியது விஜயின் மீதான வன்மத்தை இவர் வெளிக்காட்டு விதத்தில் இருந்தது
விஜய் தமிழ்நாட்டின் அடுத்த முதல்வராக அமரும் பொழுது ரஜினி சினிமாவில் நடித்துக் கொண்டுதான் இருப்பார். ரஜினி, தமிழ்நாட்டில் மாநில கட்சிகளுடனும் மத்தியில் பிஜேபியுடன் மிகுந்த நெருக்கத்தை வெளிப்படுத்தி வருகிறார். இது அவரின் சினிமா மற்றும் பல மாநிலங்களில் அவர் செய்துள்ள தொழில் முதலீட்டின் பாதுகாப்பிற்காக மிகுந்த கவனத்துடன் செயல்பட்டு வருகிறார்.
விஜயின் திருச்சி பொது கூட்டத்திற்கு கூடிய கூட்டம், தமிழக மக்கள் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிக்கு எதிராக உள்ள மனம் நிலையை இது காட்டியுள்ளது. ஊடகங்களில் ஆதரவும் விஜய்க்கு இருப்பதால் வருங்காலத்தில் விஜய் முதல்வராகி தான் அவரிடம் உதவி மற்றும் பாராட்டு விழாக்களில் கலந்து கொள்ள வேண்டிய சூழ்நிலை உருவாகிவிடும். இதனை ரஜினி ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார். விஜய் காட்டிலும் தமிழ்நாட்டில் ரஜினிக்கு மக்கள் செல்வாக்கு இருப்பதை காட்ட இசை ஞானி இளையராஜா அவர்களின் பாராட்டு விழாவை தனக்கு சாதகமாக பயன்படுத்தினார்.
விஜயின் திருச்சி பொதுக் கூட்டத்தை அனைத்து ஊடகங்களும் ஒளிபரப்ப செய்து இளையராஜாவின் பாராட்டு விழா விஜயின் 2K தலைமுறை கூட்டத்திற்கு முன் எடுபடவில்லை.
இளையராஜா பாராட்டு விழாவின் ரஜினியின் பேச்சு எதிர்மறையான தாக்கத்தை வெளிப்படுத்தியது. இதனை ஊடகங்கள் பெரிதாக பேசவில்லை இதற்கு காரணம் தமிழ்நாட்டில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி இரண்டிற்கும் விஜய் எதிராகவே உள்ளார்.
All media outlets broadcasted Vijay's Trichy public meeting and Ilayaraja's felicitation ceremony was not held before Vijay's 2K generation meeting.
Rajini's speech at Ilayaraja's felicitation ceremony had a negative impact. The media did not talk about it much because Vijay is against both the ruling party and the opposition in Tamil Nadu.


0 Comments