சரவணபவன் ஜீவஜோதி வழக்கு திரைப்படமாக உருவாகிறது: சத்யராஜ் நடிப்பில் ஞானவேல் இயக்கத்தில்

சரவணபவன் நிறுவனர் ராஜகோபால் ஜோதிடத்தின் மீது வைத்திருந்த நம்பிக்கையில் ஜோதிடரின் அறிவுரையில் மூன்றாவதாக தன்னுடைய நிறுவனத்தில் பணிபுரிந்த வேலைக்காரியின் மகள் ஜீவஜோதி திருமணம் செய்ய முயற்சி செய்கிறார்.

அதற்காக அவளுக்கு நிறைய பரிசு பொருட்களை வாங்கி கொடுத்து திருமணத்திற்கு சம்மதிக்க முயற்சி செய்கிறார். அது நிறைவேறாமல் போனதால் ஜீவஜோதி சாந்தகுமார் என்பவரை திருமணம் செய்கிறாள்.

திருமணத்திற்கு பிறகு ஜீவஜோதியின் கணவர் சாந்தகுமார் கொடைக்கானலில் வைத்து கொலை செய்யப்படுகிறார்.

இந்த கொலை வழக்கு 18 ஆண்டுகள் நடைபெற வழக்கில் குற்றவாளியாக தண்டனை வழங்கப்பட்ட ராஜகோபால் சிறைக்கு செல்லாமலே வைராக்கியமாக இருந்த மருத்துவமனையில் வைத்து இறக்கிறார்.

இந்த குற்றவாளியின் கதையை திரைப்படமாக உருவாக்கும் முயற்சியில் ஜெய் பீம் திரைப்படத்தின் இயக்குனர் ஞானவேல் சரவணபவன் ராஜகோபால் கதையில் நடிப்பதற்காக மோகன் லாலிடம் நடைபெற்ற நீண்ட நாள் பேச்சு வார்த்தையில் மோகன்லால் படத்தில் இருந்து விலகிக் கொள்ள. 

தற்பொழுது படத்தில் சத்யராஜ் நடிக்க விரைவில் படத்தின் விவரங்களையும் தயாரிப்பு நிறுவனம் வெளியிட உள்ளன. இத்திரைப்படத்தை மே மாதம் விடுமுறையில் திரைக்கு கொண்டு வரம் முயற்சிகள் நடைபெறுகிறது. 

Post a Comment

0 Comments