மாதம்பட்டி ரங்கராஜன் தமிழ்நாட்டில் சினிமா பிரபலங்களுக்கு இணையாக மக்களால் அறியப்பட்டவர். மிகப்பெரிய விஐபி மற்றும் விவிஐபி திருமணங்களில் தனது சமையல் மூலம் இந்தியா முழுவதும் சமையல் துறையில் பிரபலமானவர்.
மாதம்பட்டி ரங்கராஜன் சுருதி என்ற மனைவியும் இரு மகன்களும் உள்ளனர். இவர் பிரபலமான பின் இவருக்கு காஸ்டியூம் டிசைனராக பணிபுரிந்து வந்தவர் ஜாய் கிரீசில்டா.
ஜாய் கிரீசில்டா. ஏற்கனவே திருமணம் செய்து விவாகரத்து ஆனவர். இவர் மிகவும் பிரபலமான தமிழ் நடிகைகளுக்கு காஸ்டியூம் டிசைனர் ஆக பணிபுரிந்துள்ளார்.
மாதம்பட்டி ரங்கராஜன் 2025 ஆம் ஆண்டு ஜாய் கிரீசில்டா இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக இணையதளத்தில் போட்டோக்கள் வெளியானது. பிறகு சில நாட்களிலே தான் கர்ப்பமாக இருப்பதாக சமூக வலைதளம் மூலம் தெரிவித்தார் ஜாய் கிரீசில்டா.
இதன் பின்னால் மாதம்பட்டி ரங்கராஜனின் தெளிவான அணுகுமுறை பின்பற்றினார். ஜாய் கிரீசில்டா தன் மீது புகார் கொடுத்தால் சட்ட சிக்கலில் மாட்டிக்கொள்வோம் என தெரிந்து அவரை முறைப்படி திருமணம் செய்து கொண்டார்.
இவர் தற்போது ஏழு மாதம் கர்ப்பிணியாக உள்ளதால் இவருக்கு பொருளாதார தேவைகளை நிவர்த்தி செய்வதை தவிர்த்து வருகிறார்.
ஜாய் கிறிஸில்டா திருமணத்திற்கு முன் புகார் கொடுத்திருந்தால் மாதம்பட்டி சிறைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும் இதிலிருந்து தப்பிப்பதற்கு அவர் திருமணம் என்னும் நாடகத்தை நடத்தியுள்ளார்.
பாதிக்கப்பட்டவர் ஜாய் கிறிஸில்டா இல்லை அவர் வயிற்றில் வளரும் குழந்தை.
இக்குழந்தைக்கு பிற்காலத்தில் அவரது சொத்தில் பங்கு இருந்தாலும். இப்போது அவரை சொத்துக்கள் அனைத்தும் அவரின் மனைவியின் பெயரில் மாற்றப்பட்டால் பிற்காலத்தில் அந்த குழந்தை அனாதையாக விடப்படும்.
அந்த குழந்தைக்கு இந்த சமுதாயம் கொடுக்கும் பட்டங்கள் நிறைய உள்ளன..
மாதம்பட்டி ரங்கராஜன் திருமணம் முடிந்து மனைவி இருந்தும் வேறொரு பெண்ணின் வாழ்க்கையை அழிப்பது சரியாக இல்லை. பிரபலங்கள் பல பேர் இரண்டு திருமணம் மூன்று திருமணம் செய்துள்ளார்கள் அவர்கள் யாரும் இவரைப் போன்று கேவலமாக நடந்து கொள்ளவில்லை.
ஜாய் கிறிஸில்டா திருமணத்துக்கு பிறகு மாதம்பட்டி ரங்கராஜன் உடன் இருந்த நபுகைப்படங்களை இணையதளங்களில் வெளியிட்டது தற்போது அவருக்கு எதிராகவே திரும்பி உள்ளது. அனைத்து சமூக தலங்களும் இவர் பணத்திற்காக பிளாக்மெயில் செய்வதாக இதனை கருதினார்கள்.
அவர் எதிர்பார்த்தது, மக்கள் தனக்காக ஆதரவளிப்பார்கள் என கருதினார். அவர் எதிர்பார்த்தது நடக்காமல் போனது. பல சமூக ஊடகங்கள் அவருக்கு எதிரான கருத்துக்களை முன்வைத்து பகிரங்கமாக மிரட்டி வருகிறது. நாட்டின் உயரிய தலைவரையும் இதில் இணைத்து பேசி வருகிறார்கள். இது மிகவும் மோசமான ஒரு செயல்.
ஜாய் கிரீசில்டா தவறு செய்திருந்தாலும், அவர் வயிற்றில் வளரும் குழந்தை சமுதாய பாதுகாப்பு அளிக்க வேண்டியது அனைத்து பொது மக்களின் கடமை. பிறக்கும் பொழுது அந்த குழந்தையின் மீது சுமத்தப்படும் மோசமான விமர்சனங்கள் தவிர்க்கப்பட வேண்டும். இதனை சட்டத்தால் மட்டுமே தீர்க்க முடியும்.

0 Comments