இட்லி கடை திரைப்படம் இசை வெளியீட்டு விழாவின் போது படத்தின் இயக்குனர், நடிகர் தனுஷ் படத்தில் கதையை உருவாக்கிய விதத்தை ரசிகர்கள் முன் வெளிப்படுத்தினார். தன் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு தனது சின்ன வயதில் சாப்பிட நினைத்த இட்லி கடையில் சாப்பிட்டதையும் பிறகு சென்னையில் தான் சந்தித்த மனிதர்களை வைத்து கற்பனையாக கதையை உருவாக்குகிறேன் என்று ஆடியோ வெளியீட்டு விழாவில் தனுஷ் உருக்கமாக பேசினார்.
அருண் விஜய் அவரது அப்பாவின் வழியில்
இட்லி கடை படத்தின் தலைப்புக்கும் அதில் நடித்துள்ள நடிகர்களும் தனது வாழ்வில் சந்தித்த மனிதர்களை பிரதிபலிக்கும் விதத்தில் இருக்க வேண்டும் என்பதற்காகவே படத்தில் ராஜ்கிரனை தேர்ந்தெடுத்ததாகவும் அவர் தனது தந்தையின் படத்தில் ஹீரோவாக அறிமுகமானதையும் சுட்டிக்காட்டினார். மேலும் அருண் விஜயின் திறமையும் நடிப்பு மீது உள்ள ஆர்வத்தையும் அவர் தனது பேச்சில் குறிப்பிட்டார்.
சிம்புவை தாக்கிய வார்த்தைகள்
ஒரு கட்டத்தில் தான் ஒரு சிறந்த அப்பா என்பதை நெஞ்சை நிமிர்த்தி தெரிவிப்பதாக கூறினார். இது குறிப்பாக சிம்புக்கு மறைமுக பதிலாகவே இது உள்ளது.
தனது வளர்ச்சியின் மூலம் சினிமா துறையில் தன்னுடைய பயோகிராபி வெளியிடுவதைப் பற்றி பேசும் அளவிற்கு வளர்ந்து உள்ளதையும். அதில் தற்போது தனக்கு ஆர்வம் இல்லை என்றும் நான் சாதிக்க வேண்டியது நிறைய இருப்பதாகவும் இதில் அவர் கூறியுள்ளார்.
தன் கழுத்தில் அணிந்துள்ள ஜெபமாலை பற்றி கேட்டதற்கு இது என் தாத்தா பயன்படுத்திய ஜெபமாலை என்றும் இதனை அவர்களின் ஞாபகமாக அணிந்திருப்பதாகவும் இதற்கு சக்திகள் அதிகம் என்றும் பேட்டியின் கூறியுள்ளார்.
சினிமா துறையில் தான் சாதிக்க விரும்புவது நிறைய இருப்பதாகவும் என்னுள் அதிக எனர்ஜி அதனை வெளிப்படுத்துவதாக அனைத்து துறைகளும் தன்னை நிரூபிக்க போராடி வருகிறார் என்பதை அவர் வெளிப்படுத்தினார்.

0 Comments