பெண்ணை நேசித்த ஆண், ஆன்மாவின் பாதையை தேர்ந்தெடுத்தான்.

காலையில் எழுந்து பேசிய வார்த்தைகளின் நீங்காத நினைவுடன் காத்திருக்கிறேன். வெளியே சென்று திரும்பி வரும் மாலை வேளையில், உன் நினைவுகளுடன் என்றும் நான் இருப்பேன்.காலங்கள் மாறினாலும், நினைவுகள் பின்னோக்கி செல்கின்றன. ஒரு பறவையின் சிறகின் அசைவு, உன்னை நினைக்க வைத்தது. நீ இல்லாத பொழுது, உன்னை தேடி என் கால்கள் நடந்து வந்தது.சுவர் இல்லாத பரந்த நிலமும், தனிமையில் உன்னை நினைக்கும் எனது மனமும், எல்லைகள் இல்லாத உலகை காண வைத்ததுபெண் தனிமையில் காதலுக்கு காத்திருப்பது, பாசத்தை வெளிக்காட்டும் ஒரு பூவின் வாசனை ஆகும்.
கடவுள் கொடுத்த வாழ்க்கையில், உன் நினைவுகளுடன் வாழ்ந்த நாட்கள். பிரிவுகள் உணர்த்திய தருணங்கள், பிரிந்து சென்று விடாதே என்று எண்ணிய நினைவுகள், வாழும் வாழ்க்கையை அழகாக மாற்றியது.காற்றின் வேகத்தில் நான் நடக்கையில், ஒரு துளி நீரில் என்னை நனைய வைத்த மழை நீ. எனது நிழலில் கலந்திடாத கனவு நீ. உயரம் வளர்ந்தும், குழந்தையானேன் உன் மடியில் நான்.பேசாமல் நீ கொடுத்த நினைவுகளை சிந்தனையில் வைத்து கனவு கண்டேன். கடந்த நாள்களை நினைத்துப் பார்க்கையில், உன்னுடன் வாழ வேண்டும் என்பது கடவுள் கொடுத்த பரிசுதான் என் வாழ்க்கை.கல் தோன்றி, மண் தோன்றி, கடல் நீரும் நெருப்பும் தோன்றும் பொழுது தோன்றிய என் துணை நீ. பகலில் துணையாக நின்ற நிழல், இரவில் தனிமையாக்கி விட்டது; எனக் கடவுள் படைத்த பரிசு நீ.என் நிழலை விட, என் மனதில் குடியிருக்கும் உயிர் நீ. தாகம் பருகிய உச்சி வெயிலின் போது, என் கண் பார்த்த நிலவு நீ. சூரியனில் தோன்றிய நிலவின் குழந்தை நீ.இரவில் என் சூரியன் நீயாக, என்னுள் பூத்த வியர்வையின் மலர் நீ. ஒரு பிறவியில் வாழ்க்கையை அழகாக மாற்றும் துணை நீ. துணையாக நடந்த நிழல் நீ. நிழலின் துணையும் நீ.சூரியன் பிரித்தாலும், நிலவின் குளிரை காத்தவன் நீ. நிலவை சூடாக்கும் தருணத்தை கொடுக்க, கடவுளால் படைத்த சூரியன் நீ.ஒரு பழத்தின் சுவையை இரு மனங்களில் வெளிப்படுத்தியவர் கடவுள். மரத்தின் வேர்களை போல் பிறவியின் உயிர்களை பரவச் செய்தவர் கடவுள். உயிரை என்னுள் கொடுத்தவன் நீ, உலகம் முழுவதும் வேர்கள் பரவிட நிழலை கொடுக்கும் மரமாக மாறினேன். பழங்களாக உருவாகி பசியினை தீர்க்க உடல் எடுத்து துணையுடன் உலகை அழகாக்கினேன். கனியில்லா மரங்களும் நிழலுக்கு கருணை என்னும் அன்பை கொண்டு மழையாக மாற்றினேன். துணையின் தனிமையில் உலகை ரசித்தேன். சூரியன், நிலவின் தாலாட்டில் தூங்கிவிட்டது. துணைவனின் துணையில் இரவு சூரியன் ஆனது. இரண்டு சூரியனில் உயிரினங்கள் அழிந்து விடும் என்பதால், பகலில் துணைக்கு நிலவாக பசியாற்றினேன். 
இலையின் நிறத்தில் உடலை மறைத்தேன். மனங்களின் இருளில் விளக்கை ஏற்றினான். நம்மைப் படைத்த கடவுள் உலகமாக மாறினார்.நாம் துணையாக வாழ்வதற்கு அவர் மெல்ல மெல்ல இங்கு சிதைந்து கொண்டு உள்ளார். உலகம் கடவுள் என உணரும் வரை கடவுளின் உயிரை தினம் தினம் மனிதன் அருந்துவான். செய்த தவறுகளை உணராத பட்சத்தில் நமக்கு கிடைத்த ஒரு துளி நீரையும், பயன்படுத்த கொடுக்கப்பட்ட ஒவ்வொரு இரவு பொழுதும், இறைவனின் கருணையை பரிசுத்தமாக்கும் இரவாக அமைய வேண்டி கடவுளிடம் அவரது ஆன்மாவை கேளுங்கள். உயிரின் வேர்களை இம்மண்ணில் நிலை நிறுத்த கருணையுடன் உயிரை விதைக்கும் இரு மனங்களும் தனது தவறுகள் புனிதமாக கருத வேண்டும்.கல்லை கொண்டு பாதுகாப்பு கொடுத்தவன். கல்லால் எனக்கு உணவு தயாரித்தவன். கல்லின் கருணையில் சூரியனை காணச் செய்தவன். உன் மனம் என்னும் கல்லும் எனக்காக என் முன் கரைந்து கொண்டிருப்பதை வாழ்க்கை எனக்கு புரிய வைத்தது. இரவும் பகலும் மாறும் பொழுது உன் மனதின் மாற்றங்கள் என் மேல் இருப்பதை புரிந்து கொண்டேன். கல்லை வைத்து வீடு உருவாக்கிய நீ. கல்லான உன் மனதை என் மகிழ்ச்சிக்காக கண்ணீரில் கரைத்தவன் நீ.தேவதைகளின் பாதையில் ஒரு துளி பனியில் என்னை மறைத்து துணையாக நின்று காத்தவன். கடவுளின் வார்த்தைகள் வாழ்க்கையென வாழ்ந்து விட்டேன். கிடைத்த மகிழ்ச்சி அளவில்லாதது, கொடுத்த உயிர் கடவுளாக மாற்றியது. கடவுள் செய்த தவறை மீண்டும் மீண்டும் செய்து கடவுளிடம் செல்லாமல் கடவுளாக வாழ்ந்து விட்டேன்.பூக்களின் அழகை ரசித்தவன் தேனை அருந்த மறந்து விட்டேன். தேனீக்களின் பாதை என்னை கருணை ஆக்கியது. பசியின் வலி அதன் பின்னே தெரிந்தது.மரணம் கொடுக்கும் வலி, பசியின் வலியை காட்டிலும் சிறியது என்பதை உணரும் பொழுது உயிர்கள் பிறந்து விட்டது.பூக்களின் வண்ணங்களை ஆடையாக மாற்றி விட்டேன். தேனீக்கள் பசியை ஆற்ற திருடிய உணவும் மருந்தாக மாறும் நிலையை அடைந்து விட்டேன். பாதையின் நீளம் சுருங்கி விட்டது, உன்னுடன் வாழும் நாள்கள் இங்கு குறைந்துவிட்டது. நீ என்னில் இருந்து பிரியும் வரை வாழ்க்கை என்பது கடினம் இல்லாமல் இருந்தது. நான் வாழ்ந்த வாழ்க்கையில் எனக்கானது என்ன என்பதை அனுபவங்கள் மட்டுமே சொன்னது. சொந்தமாக எதுவும் இல்லாமல் பந்தமாக வந்த ஆன்மா தந்ததை என் சிந்தனையில் வைத்துக்கொண்டு உன்னிடம் வந்தேன்.நான் சந்தித்த கடவுள் சிந்திக்க கொடுத்ததை உன்னிடம் கொடுத்தேன். நினைவுகள் புனிதமானது உன்னை நான் நினைக்கும் பொழுது.இணைந்தவன் என்னுள் இருக்கையில் சூரியனின் உயிர்கள் என்னுள் பிறந்தது. கடவுளாக மாறினோம். கருணையை பரிசாக வழங்கினார் கடவுள். வாழ்க்கையின் நான் உணர்ந்த தருணத்தை கருணையால் நீங்கள் உணரும் பொழுது பிரிவு என்பது மிகவும் வலி தரக்கூடியது என்பது உங்களுக்கு நான் எப்படி உணர்த்துவேன். காலங்கள் சொல்லும் பிரிவின் பொழுது என்னை நினைத்துப் பார். நீ உணரும் வலி என்பது நான் அனுபவித்த வலி என்று.