தமிழ் சினிமா- பிரதீப் ரங்கநாதனின் வெற்றியை எவ்வாறு பார்க்கிறது!

YouTube content creator To Tamil cinema...

தமிழ் சினிமா காலங்களுக்கு ஏற்ப தன்னை மாற்றி வருகிறது இன்றைய இளம் தலைமுறை சினிமாவை விட இன்ஸ்டாகிராம் யூடியூப் போன்ற தளங்களின் ரீல்ஸ்களில் அடிமையாகி வருகிறார்கள். 

இதனை பிரதிபலிக்கும் சினிமா தற்போது வரும் YouTube content creator சார்ந்து பிரதிபலிக்கும் படங்களை மிகப்பெரிய அளவில் வெற்றி பெற வைக்கிறது.

நாம் பார்க்கும் சினிமா கடந்து வந்த பாதை 60 காலங்களில் இருந்து இன்று வரை சினிமா மிகப் பெரிய மாற்றத்தை சந்தித்துள்ளது. youtube தளம் instagram ரீல்ஸ் இதில் இருந்து ஹீரோக்களை மக்கள் விரும்ப ஆரம்பித்து விட்டார்கள். இவர்களுக்கு கூடிய கூட்டங்கள் ரசிகர்களின் ரசனையை தமிழ் புதிய இயக்குனர்கள் தனக்காக மாற்றிக் கொண்ட இளம் இயக்குனர்கள் கீரீத்தீஸ்வரன்,பிரதீப் ரங்கநாதன் போன்ற இயக்குனர்களுக்கு மிகப்பெரிய வெற்றினை தமிழ் சினிமா கொடுத்துள்ளது.

Sivaji -MGR -kalaignar:

சினிமாவின் ஆளுமையாக இருந்து வசனங்கள் மற்றும் நடிப்பு தன்னை நிரூபித்த MGR,Sivaji,Rajini,Kamal,Ajith,Vijay நடிக்க ஆரம்பித்த காலத்தில் சினிமாவில் நிலைத்திருக்க தங்களுக்குள் இருந்த திறமையினை வெளிப்படுத்த அவர்களுக்கு நீண்ட காலம் தேவைப்பட்டது.

60, 70களில் வந்த திரைப்படத்தின் வசனங்கள் மற்றும் நடிப்பு இன்றைய சினிமா நடிகர்களால் நடிக்க முடியாது. தமிழ் சினிமாவின் இருந்து தமிழ்நாட்டு அரசியலுக்கு பல தலைவர்கள் உருவாக்கியது. தமிழ்நாட்டில் மொழியின் மீது இருந்த உணர்வை சினிமாவின் காண்பித்து கலைஞர் அன்றைய ரசிகர்களை மிக எளிதில் சென்றடைந்தார்.மக்களின் நம்பிக்கையும் பெற்றார்.

கலைஞரின் வசனங்கள் தமிழ் மக்களை திரும்பி பார்க்க வைத்தது. அவருடைய வசனங்களை வைத்து அரசியல் தமிழ்நாட்டில் நடந்தது என்பதே உண்மை.

கலைஞர் திரையில் பேசிய வசனங்களை நிஜத்தில் செய்து காட்டி “கலை உலகில் காவியம் படைத்து மன்னராக மாணிக்கம் சூடி தமிழ் மக்களின் இதயங்களைக் கவர்ந்தவர் கலைஞர்”.

கலைஞர் MGR சமகால அரசியல் ஆளுமைகளுக்குப் பிறகு. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்த ரஜினி, கமல் சினிமாவில் சாதித்ததை காட்டிலும் அரசியலில் சாதிக்காமல் சென்று விட்டார்கள். 

Last superstar in Tamil cinema:

சினிமாவில் இருந்து கடைசி அரசியல் ஆளுமையாக எதிர்பார்க்கப்படும் விஜய் அரசியல் தற்பொழுது யாராலும் கணிக்க முடியாத நிலையில் உள்ளது. 

2K - Story;


அரசியல் பிறந்த இடம்...

இவர்களைக் கடந்து இன்றைய சினிமாவில் மிகவும் பேசக்கூடிய நபராக பிரதீப் ரங்கநாதன் மாறி உள்ளார். இதற்கான காரணங்கள் தமிழ் சினிமாவில் யாராலும் செய்ய முடியாத வெற்றியினை இவர் கொடுத்துள்ளார். அறிமுக நடிகராக இருந்து தமிழ் மற்றும் தெலுங்கு திரையில் தொடர்ந்து 3 மிகப்பெரிய வெற்றி படங்களை மிகப்பெரிய அளவில் 100 கோடி ரூபாய் வசூலை கடந்து இவரது வெற்றி பேசும் பொருளாக மாறி உள்ளது.

மிகவும் ஒல்லியான ஒரு தேகம் இதுவரை தமிழ் சினிமாவில் தனுசை உருவா கேலி செய்து தோற்றுப் போனவர்களுக்கு பிரதீப் ரங்கராஜனை பார்த்து. முதல் வெற்றி அதிர்ஷ்டத்தால் வந்தது, அது முடிந்துவிடும் என பொறுமை காத்தவர்களுக்கு தன்னுடைய 3 படங்கள் மூலம் மிகப்பெரிய வெற்றியினை கொடுத்து தமிழ் சினிமாவில் யாராலும் சாதிக்க முடியாததை தன்னால் முடியும் என்று சாதித்த காட்டியவர் பிரதீப் ரங்கநாதன்.

பிரதீப் ரங்கநாதனின் வெற்றியை காட்டிலும் அவர் தேர்ந்தெடுத்த கதைகள் தமிழ் சினிமாவில் விவாதத்தை கிளப்பியுள்ளது. 

2K தலைமுறையினர் இன்ஸ்டாகிராம் யூடியூப் ரீல்ஸ்களில் அதிக நேரங்களை செலவிட்டு வருகிறார்கள். TTF Vasan youtube பிரபலம் கடை திறப்பு விழாவிற்கு அவரை பார்க்க கூடிய கூட்டம் முன்னணி நடிகர்களுக்கு இணையான கூட்டம் TTF Vasan வந்தது.

இணையதளத்தின் மூலம் கட்சியை பலப்படுத்தும் அரசியல்வாதிகளின் பேச்சுகள் அதிக திரைப்படங்களில் பிரதிபலிக்கின்றன. 

Daily newspaper;

 நாம் தினம் செய்தித்தாள்களில் படிக்கும் திருமணத்தை மீறிய காதல்கள் சமுதாயத்தில் உள்ள உறவுகள் எவ்வாறு ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதை திரையில் தத்ரூபமாக காட்டியதன் மூலம் இளம் சமுதாயத்தின் மனங்களை திரைப்படங்கள் வெற்றியின் மூலம் பிரதிபலித்தாலும். அவர்களுக்குப் பின்னால் உள்ள நீண்ட வாழ்க்கை இந்த சமுதாயம் உருவாக காரணமாக அமைகிறது. 

சமூகத்தில் இளம் தலைமுறை வாழ்க்கையை பிரதிபலிக்கும் எண்ணங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்டாலும். அனைத்து காலங்களுக்கும் பொருந்து சமூகச் சட்டங்கள் குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்டது.


வெற்றிகள் பெற திறமைகள் வேண்டும் என்பார்கள். வெற்றி பெற்ற பின் அதனை அதிர்ஷ்டம் என்பார்கள். உங்களுடைய வெற்றிக்கு அங்கீகாரம் யாரும் கொடுக்க முன்வர மாட்டார்கள்.

காலம் தனது பாதையை யாருக்கும் சார்ந்து இருக்காது. வெற்றி பெற்றவனுக்கு மகிழ்ச்சி சொந்தம். பணம் படைத்தவருக்கு இவ்வுலகம் சொந்தம்.


பிரதீப் ரங்கநாதனின் வெற்றி தமிழ் சினிமாவை பிரதீப் ரங்கநாதனுக்கு 

 முன் மற்றும் பின். என பிரிக்கும் அளவிற்கு அவருடைய கதைகள் தமிழ் சினிமாவில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

Gen Z - 2K Generation;

Gen Z தலைமுறையினர் இந்தியாவின் அண்டை நாடுகளில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தி வரும் வேளையில். Gen Z தலைமுறையினர் தமிழ் சினிமாவில் மாற்றத்தை உருவாக்கி வருகிறார்கள். 

Tamil Cinema News


Kollywood Updates


Tamil Movie Updates


Tamil Actor News


Tamil Actress News


Tamil Movie Review


Tamil Film Industry

Pradeep Ranganathan News


Dhanush New Movie


Vijay Updates


Ajith Kumar 


Rajinikanth Latest News


Kamal Haasan Movie Update

#TamilCinema

#KollywoodNews

Post a Comment

0 Comments