விஜய். சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்து நாட்டை ஆளும் தலைவர்களைப் போல் தானும் நேரிடையாக அரசியலுக்கு வந்து ஒரே தேர்தலில் நாட்டை ஆள்வதில் மட்டும் குறியாக இருக்கிறார்.
சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்து வெற்றி பெற்ற கலைஞர் கருணாநிதி, எம்.ஜி.ஆர் போன்றவர்கள் மக்களுடன் நெருங்கி பழகி மக்களின் ஒருவராக நின்று தேர்தலில் வெற்றி பெற்று அதிகாரத்திற்கு வந்தவர்கள்.
ரசிகர்களை வாக்காக மாற்ற நினைத்து
விஜய் தனது ரசிகர்களை வைத்து 2026 ஆம் ஆண்டு தேர்தலை முன்னிறுத்தி தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்று மிக மோசமான திட்டங்களுடன் களத்தில் இறங்கியதன் விளைவு. கரூர் வேலுச்சாமிபுரம் பிரச்சாரக் கூட்டம் எந்த அரசியல் தலைவருக்கும் நீதிமன்றம் வழங்காத அறிவுரைகளை விஜயின் பிரச்சாரக் கூட்டத்திற்கு வழங்கியது.
விஜய் தனது ரசிகர்களை வாக்காக மாற்ற எண்ணத்தில் அவர்களை நேரிடையாக அரசியலில் பயன்படுத்துகிறார். அவர்களுக்கு ரசிகர்களுக்கும் தொண்டர்களுக்கும் இடையிலான வித்தியாசம் தெரிவதில்லை.
ஒரே தேர்தலில் CM
தொண்டர்கள் மக்களின் பிரதிநிதியாக நின்று தலைவரின் கட்டளைகளை மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.
விஜய்க்கு கூடிய கூட்டங்கள் தொண்டர்களாக இல்லாமல் ரசிகர் ஆகவே உள்ளனர். விஜய் பார்க்க வேண்டி தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் இருந்தும் விடுமுறையை முன்னிட்டு விடுமுறையை கொண்டாடுவதைப் போன்று விஜயின் பிரச்சார கூட்டத்திற்கு வருகிறார்கள்.
அரசியலுக்கு பக்குவப்படாத ரசிகர்கள்
இவர்களால் விஜயின் பிரச்சாரக் கூட்டம் நடைபெறும் பகுதிகளில் உள்ள அரசாங்க சொத்து இருக்கு சேதம் விளைவிக்கிறார்கள்.
இதனை முன்னே எச்சரித்த தமிழ்நாடு அரசு நீதிமன்றம் சென்று தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜயின் பிரச்சாரக் கூட்டத்திற்கு நீதிமன்றம் மூலம் அறிவுரைகள் வழங்கப்பட்டன.
விடுமுறையை கொண்டாட நினைத்த ரசிகர்கள்
நீதிமன்றம் வழங்கிய அறிவுரைகள் வேறு எந்த அரசியல் கட்சிகளுக்கும் வழங்கப்பட்டது இல்லை. மரத்தில் ஏறக்கூடாது பொது சொத்திற்கு சேதம் விளைவிக்க கூடாது கரண்ட் கம்பங்களுக்கு மேல் ஏறக்கூடாது இது போன்ற உத்தரவுகள் அவர்கள் தொண்டர்களாக வரவில்லை ரசிகர்களாகவே விஜய் பார்க்க வருகிறார்கள் என்பதை உணர்த்துகிறது.
ரசிகர்களை அன்பை அரசியலுக்கு பயன்படுத்திக் கண்ட விஜய்
TTF வாசன் கடை திறப்பு விழாவிற்கு வந்த கூட்டத்தை விட விஜயின் கூட்டம் ஒன்றும் பெரிதாக இல்லை. விஜய்யின் ரசிகர்கள் விடுமுறையை கழிப்பதற்காக விஜயை பார்க்க வருகிறார்கள். விஜய் அதனை வாக்காக மாற்ற முயற்சிக்கிறார். இதற்கு கிடைத்த பரிசு 33 உயிர்கள் ரசிகர்களின் அன்பை சுயநலத்திற்கு பயன்படுத்தாதீர்கள். இது போன்ற சூழ்நிலைகளை முன்பே கணித்த அஜித்குமார் தன்னுடைய ரசிகர்களை தனது சுயநலத்திற்காக பயன்படுத்த மாட்டேன் என கூறி நாட்டின் பெருமை சேர்க்கும் விஷயங்களில் தனது கவனத்தை செலுத்தி வருகிறார்.
பணத்திற்கு வந்த கூட்டம் இல்லை விடுமுறையில் நடிகரை பார்க்க வந்த கூட்டம்
மக்கள் நல்ல தலைவரை தங்களின் வாழ்வியலுடன் பயணிக்கும் மக்களின் உரிமைகளை போராடும் நபரை தலைவராக தேர்ந்தெடுக்கும் பட்சத்தில் விடுமுறைக்கு தலைவராகவும் இது போன்ற நடிகர்களை நடிகர்களாக பார்க்க வேண்டும் என்பது படித்த இளம் தலைமுறை உணர வேண்டும்.
0 Comments