கிரிக்கெட்டில் இருந்து நான் விலகினாலும் கிரிக்கெட் என்னை விடவில்லை- “jeeva” திரைப்படம் வெளிவந்து 11-வது ஆண்டு ட்ரீட் செய்த- விஷ்ணு விஷால்.

 விஷ்ணு விஷால் நடிப்பில் 2014 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் “ஜீவா” விஷ்ணு விஷாலுக்கு நடிப்பிற்கான அங்கீகாரத்தை பெற்று தந்த படம் தமிழ் சினிமாவில் தன்னை நடிகராக நிலை நிறுத்திய படமாக “ஜீவா” விஷ்ணு விஷாலுக்கு உள்ளது.

விஷ்ணு விஷால் தமிழ் சினிமாவில் 2009 ஆம் ஆண்டு அறிமுகம் ஆகும் பொழுது வெண்ணிலா கபடி குழு என்ற திரைப்படத்தில் விளையாட்டை மையமாக வைத்து மிகப்பெரிய வெற்றினை அவருக்கு கொடுத்தது. அதன்பின் அவர் நடித்த திரைப்படங்கள் பெரிய அளவில் பேசப்படவில்லை. 



மறுபடியும் விளையாட்டை மையமாக வைத்து இவர் நடித்த ஜீவா திரைப்படம் ரசிகர்களிடம் இவரை நடிகராக கொண்டு சென்றது. ஜீவா திரைப்படத்தில் ஜாதி வைத்து விளையாட்டில் நடக்கும் பாரபட்சத்தை திரையில் காட்டி இருந்தார். இத்திரைப்படம் மக்களிடம் மிகுந்த வரவேற்பு பெற்றது இத்திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் டி இமான் இசையில் மிகுந்த வரவேற்பை பெற்றது. 


இந்த திரைப்படம் வெளிவந்து 11 ஆம் ஆண்டு முன்னிட்டு விஷ்ணு விஷால் தனது X பக்கத்தில் ஜீவா திரைப்படத்தின் போஸ்டரை பதிவிட்டுள்ளார்.


Post a Comment

0 Comments