தங்கம் தொடர்ந்து உயர்ந்து 3,800 டாலர் மேல் வர்த்தகம் என்னும் புதிய உச்சத்தில் உள்ளது. வரும் வாரம் இஸ்ரேல் காசா போர் முடிவுக்கு கொண்டு வரும் இறுதி கட்டத்தை அமெரிக்கா எட்டியுள்ளதாக நம்பத்தக்க தகவலால் தங்கத்தின் மீதான அழுத்தம் வரும் வாரத்தில் குறையலாம்.
அமெரிக்காவில் டொனால்ட் டிரம்ப் அரசாங்கத்தின் நிர்வாகத்தை முடக்குக்கும் அபாயம் அதிகம் இருப்பதால். டொனால்ட் டிரம்ப் இரு கட்சியின் காங்கிரஸ் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறார்.
அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பேச்சுவார்த்தை முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.
உலக நாடுகளின் அழுத்தத்திற்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது காசா மீதான ஆக்கிரமிப்பு எண்ணத்தை மறந்துள்ளார்.
அமெரிக்காவின் ஏகாதிபதி அதிகாரம் தனக்கு சாதகமாக பயன்படுத்தி காசா மீதான மோசமான தாக்குதலை ஐநா சபையில் நியாயப்படுத்த நினைத்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மிகப்பெரிய அவமானத்தை உலக அரங்கில் உலக தலைவர்களால் கொடுக்கப்பட்டது.
இஸ்ரேலில் தனது அதிகாரத்தை தக்க வைப்பதற்காக நிலையற்ற ஆட்சி வைத்து காசா மீது இவரின் கண்மூடித்தனமான தாக்குதல் உலக அரங்கில் இஸ்ரேல் என்ற நாட்டிற்கு மிகப்பெரிய கெட்ட பெயரை பெற்று கொடுத்துள்ளார்.
தற்போதைய சூழ்நிலையில் இஸ்ரேலும் அமெரிக்காவும் அழுத்தத்திற்கு கீழ்படிவது உலக பொருளாதார கட்டமைப்பிற்கு வலுவாக அமையும்.
வரும் வாரங்களில் பொருளாதாரம் சீரடைந்து போர் முடிவுகள் சாதகமாக அமையும் என்பது முதலீட்டாளர்களின் நம்பிக்கையாக உள்ளது.
0 Comments