நாகப்பட்டினம் பிரச்சாரக் கூட்டத்தில் பேசியது என்ன
விஜயின் அரசியல் வருகையை விரும்பாமல் ஆளும் கட்சியின் மறைமுக திட்டத்தில் விஜய் அரசியல் பலியாடாக மாற்றப்பட்டாரா!
விஜய் சனிக்கிழமை தோறும் தனது அரசியல் பிரச்சார கூட்டங்களை நடத்தி வருகிறார். இவருடைய பிரச்சார கூட்டத்திற்கு வரும் கூட்டத்தை கண்டு ஆளுங்கட்சி மிரண்டு போய் உள்ளது.
விஜய்க்கு எதிராக செயல்படும்.
மதுரையில் விஜயின் பிரச்சாரக் கூட்டத்திற்கு கூடிய தொண்டர்களால் மாநில அரசு நீதிமன்றம் வரை செல்ல வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டது. நாகப்பட்டினத்தில் விஜய் பேசும் பொழுது காவல்துறையால் தங்களுக்கு கொடுக்கப்படும் அழுத்தத்தை குறிப்பிட்டார்.
5 நிமிடம் பேசுவதற்கு அதிக கட்டுப்பாடுகளை விதைப்பதாகவும் நாங்கள் கேட்கும் இடங்களை தர மறுப்பதாகவும் போதிய இடவசதி, வாகன போக்குவரத்து நெரிசல் உள்ள பகுதிகளை தங்களுக்கு ஒதுக்கி தருவதாக நாகப்பட்டினம் பிரச்சாரக் கூட்டத்தில் விஜயின் பேச்சு தற்பொழுது விஜய் தொண்டர்களால் பரப்பப்பட்டு வருகிறது.
கரூரில் மாற்று இடங்கள் இல்லையா
மாநில காவல்துறை விஜயின் மதுரை பிரச்சாரக் கூட்டம் மற்றும் நாகப்பட்டினம் பிரச்சார கூட்டங்களில் கூடிய தொண்டர்களை வைத்து அடுத்த கூட்டத்திற்கு போதிய இடவசதி வாகன செல்வதற்கு ஏற்ற இடத்தை தேர்வு செய்து கொடுத்திருக்க வேண்டும். கரூர் விஜயின் பிரச்சார கூட்டத்தில் விஜய் பேசிக் கொண்டிருக்கும் பொழுது ஆம்புலன்ஸ் செல்லும் வழியில் பிரச்சாரக் கூட்டத்திற்கு இடம் ஒதுக்கப்பட்டதாக தமிழக வெற்றி கழகத்தின் தொண்டர்களால் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.
கூட்டத்தில் கலந்து கொண்ட தொண்டர்கள் விஜய்யின் வருகைக்கு நாங்கள் மதியத்தில் இருந்து காத்துக் கொண்டிருக்கிறோம் நீண்ட இடைவேளைக்கு பிறகு விஜய் தன்னுடைய பேச்சை ஆரம்பித்தார் அவர் ஒதுக்கப்பட்ட இடம் மிகக் குறுகியதாக வாகன செல்வதற்கு போதிய இடவசதி இல்லாமல் இருந்ததும். மயக்கம் அடைந்த தொண்டர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவும் முதலுதவி செய்வதற்கும் அதிக நேரம் ஆனது.
கூட்டத்தில் கலந்து கொண்ட தொண்டர்கள் விஜய் கலந்து கொள்ள அதிக தொண்டர்கள் வருவார்கள் என தெரிந்தும் போதிய இடவசதி இல்லாத இடத்தை ஒதுக்கி கூட்டத்தை தவறாக வழி நடத்தியது 39 பேர் இறப்புக்கு காரணம் எனக் குற்றம் சாட்டுகிறார்கள்.
கூட்ட நெரிசலை கணித்து நாகப்பட்டினம் பொதுக்கூட்டத்தில் விஜய் பேசிய வீடியோவை அவரது தொண்டர்கள் பதிவிட்டு வருகிறார்கள்.
முழு விசாரணை நடைபெறுமா
மேலும் முழு விசாரணைக்கு பின் தவறு யார் பக்கம் உள்ளது என்பது தெரிந்துவிடும்.
கரூரில் அதிக மக்கள் கூடும் இடங்கள் இருந்தும் திட்டமிட்டு விஜய்க்கு களங்கத்தை உண்டாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த இடம் ஒதுக்கப்பட்டதா என்பது விசாரணைக்கு பின் தெரிய வரும்.
0 Comments