youtube பிரபலங்கள் பணத்திற்காக தங்களுடைய திருமணங்கள் மற்றும் சொத்துக்களை வீடியோவாக காட்டுவதால். இளம் தலைமுறை மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள்.

 வசதியானவர்களின் திருமணம் முதல் சினிமா பிரபலம் மற்றும் youtube பிரபலங்களும் திருமணங்களில் செய்யப்படும் அதிக செலவினங்களை மக்கள் பார்த்து தனக்கும் அதே போல் செய்ய வேண்டும் என நடுத்தர மற்றும் அதிக கடன் வாங்கி திருமணம் செய்யும் நபர்கள் கூட இதனை விரும்புகிறார்கள். திருமணத்தில் அணியப்படும் நகைகளும் அங்கு நடனமாடும் பெண்களும் வரவேற்பு உணவு பரிமாறும் நபர்களும் அவர்களுக்குப் பின்னால் உள்ள கார்ப்பரேட் கம்பெனிகளில் தொழில் விளம்பரமாக பிரபலங்களின் திருமணங்களில் முதலீடாகவே பார்க்கப்படுகிறது இதனை புரிந்து கொள்ளாமல் நடுத்தர வர்க்க குடும்பத்தில் உள்ளவர்களும் தனது திருமணங்களில் இதனை அதிகம் வைத்து வருகிறார்கள்.

கடன்களில் செய்யப்படும் திருமணங்கள் அதிகம் தற்பொழுது தங்களின் நகைகளையும் செல்வதையும் விற்றுவிட்டு கடின காலங்களில் மிகுந்த மன அழுத்தத்தில் போராடி வருகிறார்கள்.

அவர்கள் தங்களுடைய உழைப்பிற்கு கிடைத்த செல்வத்தை சரியான வழிகளில் செலவிடுவதை தவிர்ப்பது. தங்கள் உழைப்பில் கிடைத்த செல்வம் மீது என்பதை அவர்கள் உணர மறுக்கிறார்கள்


பணம் ஒருவரிடம் இருந்து மற்றவரிடம் கைமாறும்பொழுது அது அதிக உழைப்பை யார் கொடுக்கிறார்கள் என்பதை பொறுத்து செல்வம் மற்றவரிடம் கைக்கு வந்து சேரும் இதை மனிதர்கள் எளிதில் புரிந்து கொள்ள மாட்டார்கள் அவர்களின் இளமை காலத்தை தவிர்த்து முதுமைக்கு செல்லும் பொழுது பணத்திற்கான போட்டியில் பின் தங்கும் சூழ்நிலையை அவர்கள் எதிர்கொள்கிறார்கள்.



இவ்வுலகம் வலிமையைக் காட்டிலும் அறிவுக்கு முக்கியம் கொடுக்கும் மனிதர்களால் உருவாக்கப்பட்டது. மிக எளிதான வேலையை செய்யக் கூடியவர்கள் உடல் வலிமை இல்லாத மனிதர்கள் அறிவை மட்டுமே வைத்து கட்டிய உலக தொழில் புரட்சியில். இளமை முதுமை கணக்கில் கொண்டு ஒருவர் போராடுவதை இவ்வுலகம் ஏற்காது. செல்வம் ஒருவரிடம் சேரும்பொழுது அது வெளியே வராத அளவிற்கு மிகப்பெரிய சட்டங்களால் இங்கு தடுக்கப்படுகிறது. தற்பொழுது பெரும் நிறுவனங்கள் தனிநபர் கீழ் இயங்குவதை விட ஒரு குழுவின் கீழ் இயங்கி வருகிறது. அந்நிறுவனங்கள் வருடாந்திரத்தில் லாபத்தை ஈட்ட வில்லை என்றால் அதன் தலைவரை உடனடியாக மாற்றவும் முதலீட்டாளர்களின் அழுத்தத்திற்கு கீழ்ப்படியவும் செல்வங்கள் பலதரப்பட்ட மக்களின் வாழ்வியலை குறிக்கும். கூட்டுக்குடும்பமான நிறுவனங்களால் நடத்தப்பட்டு வருகிறது. இவர்கள் லாபத்தை ஈட்டுவதற்காக செல்வத்தை செலவிடும் பொழுது அதில் கிடைக்கும் வருமானங்களை கீழ்மட்ட தொழிலாளர்கள் பெரும்பொழுது அதனை அவர்கள் சிக்கனமாக சேர்த்து வைப்பது. செல்வம் தனிநபர் கீழிருந்து வராமல் ஒரு மிகப்பெரிய மக்கள் கூட்டத்தின் வாழ்வாதாரத்தை கணக்கிட்டு செல்வங்கள் கீழே வருகிறது அதனை கவனமாக கையாள தெரிந்த ஒவ்வொரு உழைப்பாளியும் பணத்தின் மீதான உண்மையைப் புரிந்து சேமிப்பு மற்றும் வளர்ச்சியை ஊக்குவிக்கும் திட்டங்களில் முதலீடு செய்யவும் பாதுகாப்பான வாழ்க்கையே வாழ அவர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

செல்வங்கள் வந்து சேரும்பொழுது மக்கள் தனது மனநிலையை செலவினங்களில் கவனமாக செலவிட வேண்டும். கொரோனா போன்ற பெரும் தொற்றுகளும் எதிர்பாராத செலவினங்களும் வாழ்க்கையை கணிக்க முடியாத நிலையில் நம்மை கொண்டு வந்து நிறுத்தி விடும். கடன் போன்ற ஆடம்பர செலவினங்களுக்கு நம்மை அடிமையாக்கும். அழைத்து நம்மளுக்கு கொடுக்கப்படும் கடன்களை தவிர்ப்பது. நம்மை மற்றவரின் முன் கைகட்டி நிற்க வைக்காமல் இருக்க உதவி புரியும்.


கடனில் மூழ்கியவர்கள் அதிக பேர் தனது வாழ்க்கையை மீண்டு வர முடியாத அளவிற்கு சிதைத்து விடுகிறார்கள். செல்வத்தின் சக்தியை உணராமல் சில நாட்களில் பழுதாகி போகும் ஆடம்பரப் பொருட்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் நம் உழைப்பிற்கு கொடுப்பதில்லை. மற்றவர்களின் முன் கடினமான சூழ்நிலைகளில் வேலை பார்க்கும் ஒவ்வொரு இளைஞர்களும் தன் வாழ்க்கையில் எதிர்காலத்தை கையேந்தி எதிர்பார்த்து இருக்காமல் தன்னுடைய சரியான திட்டங்களையும் சேமிப்புகளையும் பலப்படுத்தினால். பிற்காலத்தில் வாழ்க்கையில் பணக்கஷ்டம் வராமல் இருக்கும். எந்த சூழ்நிலையிலும் உறவினர்களிடம் கையேந்தி விடும் நிலமையை பணத்தால் மட்டுமே கொடுக்க முடியும்.


உறவுகளை குறை சொல்வது. நாம் வாழ்ந்த வாழ்க்கையை நினைத்துப் பார்க்க வேண்டும். செல்வத்திற்கு நாம் கொடுக்கும் முக்கியத்துவத்தை அறிந்து. மற்றவர்களை எண்ணிப் பார்க்க வேண்டும். செல்வம் உறவுகளை காட்டிலும் மனிதனை பாதுகாக்கும். 

Post a Comment

0 Comments