இந்தியாவில் அதிக கனிம வளங்கள் இல்லாமல் இருப்பது மற்றும் நவீன தொழில்நுட்பங்கள் இவற்றில் பின்தங்கி

 இந்தியாவில் அதிகரித்து வரும் மக்கள் தொகைக்கு படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்து அவர்களின் வாழ்க்கையை தன்னிறைவு ஏற்படுத்த மக்களால் ஏற்படுத்தியுள்ள அரசாங்கம் தனது முழு முயற்சியும் தற்போது செய்து வருகிறது.


இந்தியாவில் அதிக கனிம வளங்கள் இல்லாமல் இருப்பது மற்றும் நவீன தொழில்நுட்பங்கள் இவற்றில் பின்தங்கி இருப்பது மட்டுமே இந்தியாவின் மிகப்பெரிய பலவீனமாக உள்ளது.



நவீன தொழில்நுட்பங்கள் ராணுவம் சார்ந்து தனது தேச பாதுகாப்பில் முக்கிய பங்கு வகிக்கும் பொழுது நாம் நாட்டின் பாதுகாப்பை மற்றொரு நாட்டின் தொழில்நுட்பத்தை சார்ந்து இருப்பது இந்தியாவிற்கு நீண்ட காலமாகவே வல்லரசு கனவை தவிர்த்து வருகிறது.


இந்தியாவில் நாம் அதிகம் இறக்குமதி செய்யும் பொருட்களில் முதலாவதாக உள்ளது ஆயில் மற்றும் தங்கம் இவற்றில் நாட்டு உற்பத்தி திறன் மிகவும் குறைவாக உள்ளது. நமது மக்களின் செல்வங்கள் அனைத்தும். மற்ற நாட்டிடம் இந்த இரண்டிற்கும் மட்டுமே செலவு அதிகம் கொடுக்கிறது.

 நாட்டில் இறக்குமதி ஏற்றுமதிக்கான செலவினங்களில் ஏற்றத்தாழ்வை ஏற்படுத்துகிறது. தங்கத்தை மக்கள் சிறந்த முதலீடாகவும் அரசாங்கம் உள்பட அனைவரும் தங்கத்தில் முதலீடு செய்வது. தங்கம் இந்தியாவில் மிகக் குறைந்த அளவிலும் கிடைப்பது அது இந்தியாவின் பலவீனமாக உள்ளது.


தங்கத்தை மக்கள் முதலீடாக கருதினாலும் தங்கம் ஒவ்வொரு மனிதனின் கௌரவம் மற்றும் பொருளாதார மட்டத்தில் தங்களைப் உயர்த்தி காட்ட செய்யப்படும் ஆடம்பர அணிகலனாக உள்ளது.


வங்கிகளில் தங்கத்திற்கு கடன் கொடுக்கும் திட்டம் மற்ற எந்த உலகத்திற்கும் கொடுப்பதில்லை. இது மறைமுகமாக மக்கள் தங்கத்தில் முதலீடு செய்ய ஊக்குவிக்கப்படுகிறார்கள். தங்கத்தை மக்கள் வாங்கும் பொழுதும் மற்றும் விற்கும் பொழுது அதற்கு செய்கூலி சேதாரங்களை அவர்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் செலவிடுகிறார்கள்.



இதை மக்கள் வங்கியில் பிக்சட் டெபாசிட் முதலீடு செய்யும் பொழுது அதற்கு கால இடைவெளியில் அவர்களுக்கு தங்கத்தை காட்டிலும் மிகுந்த பணம் வெகுமதி கிடைக்கும் இது அவர்களுக்கு மிகுதியாகத் தெரியவில்லை. அதிக மக்கள் தங்கத்தை வாங்கி வீட்டில் வைப்பதை விட வங்கியில் நகை கடனுக்கு வைப்பதே அதிகம் உள்ளது.


அவர்கள் தங்கத்தை பாதுகாப்பான முதலீடாக பார்த்தாலும் லாபகரமான முதலீடு எது என பார்ப்பது இல்லை.


உலகிலேயே இந்தியாவில் தங்க நுகர்வு அதிகம் உள்ளது அதுவும் தென்னிந்தியாவில் தங்கத்தின் மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கை வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள மக்களும் தங்கத்தில் அதிக முதலீடு செய்கிறார்கள்.



ஒருவர் தங்கத்தில் முதலீடு செய்யும் பொழுது; தங்கத்தை வாங்கும் ஒருவர் 

தங்கத்தின் செய்கூலி சேதாரம்

 கணக்கிடுவதும்;மீண்டும் தங்கத்தை வங்கியில் நகை கடனாக வைக்கும் பொழுது அதற்கு மாதம் கொடுக்கப்படும் வட்டியும்: பிறகு கடினமான நாட்களில் தங்கத்தை விற்க வேண்டிய சூழ்நிலையில் நகைகள் சேதாரத்தை கழிப்பது; உங்களுடைய உழைப்பு ஆடம்பர வாழ்க்கையில் தேவையற்ற செலவாக கரைந்துள்ளது அவர்கள் தங்கள் கண் முன்னே காண்கிறார்கள். இதை 

அவர்கள் காலம் கடந்து உணரும் பொழுது. தங்கத்தை காட்டிலும் வங்கிகளில் மேற்கொள்ளப்படும் பிக்சட் டெபாசிட் அதிக பாதுகாப்பும் மன நிம்மதியும் அளிக்கும் என்பதை அவர்கள் உணர்கிறார்கள்.


இன்று பெரும்பாலும் சீனியர் சிட்டிசன் தங்கள் குழந்தைகளை நம்புவதை விட வங்கிகளில் கொடுக்கப்படும் மிகக் குறைந்த வட்டியில் பிக்சட் டெபாசிட்டில் திட்டத்தில் முதலீடு செய்வது அதிக நம்புகிறார்கள். அவர்கள் கடைசி காலங்களில் பாதுகாப்பான நம்பிக்கையான ஒரு தோழனாக இத்திட்டத்தை அவர்கள் பார்க்கிறார்கள்.


இன்றைய இளம் தலைமுறைகள் அதிகம் தங்கத்தில் முதலீடு செய்தாலும் சிறு சேமிப்பில் முதலீடு செய்யும் பழக்கம் மட்டுமே அவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது. அதனைத் தாண்டி பிக்சட் டெபாசிட்டில் குறைந்த அளவில் முதலீடு செய்து வருவது நீண்ட காலத்திற்கு பாதுகாப்பை அளிக்கும் என்பது அவர்களுக்கு தெரிவதில்லை. 

Post a Comment

0 Comments