விஜயகாந்த் தமிழ்நாடு நடிகர் சங்கம்
40 கோடி ரூபாய் பொருள் செலவில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வரும் தென்னிந்தியா நடிகர் சங்கம் கட்டடம். விரைவில் அதன் திறப்பு விழாவிற்கு தயாராகி வருகிறது.
தென்னிந்தியா நடிகர் சங்கம் பெயரை மாற்ற வேண்டும் என்று நீண்ட காலமாக போராட்டங்கள் வலுத்து வருகிறது. தமிழ்நாடு நடிகர் சங்கம் என பெயரை மாற்றுமாறு பல அமைப்புகளும் அதனுடன் தொடர்புடைய நடிகர்கள் குரல் கொடுத்து வருகிறார்கள்.
தென்னிந்திய நடிகர் சங்கம் என்பது ஆந்திரா கேரளா கர்நாடகா மாநிலங்கள் ஒருங்கிணைந்து இருந்ததற்கான அடையாளமாக தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பெயரை மாற்றாமல் இன்று வரை வைத்து வருகிறார்கள்.
தென்னிந்திய நடிகர் சங்கத்தில் கடந்த காலத்தில் சிவாஜி கணேசனுக்கு பிறகு அதிக ஆண்டு நடிகர் சங்கத்தின் தலைவராக இருந்தவர் ராதா ரவி. ராதாரவி தலைவராக இருந்த பொழுது அவருடைய நிர்வாகத்தின் நடிகர் சங்கத்தில் அதிகப்படியான கடன்கள் உருவாகின. அதன்பின் நடிகர் சங்கத்திற்கு தலைவர் பொறுப்புக்கு வந்த விஜயகாந்த் கடனை அடைப்பதில் அதிக கவனம் செலுத்தி வந்தார்.
விஜயகாந்த் அஜித்குமார் மோதல்:-
தமிழர்கள் அதிகம் வசிக்கும் மலேசியா சிங்கப்பூருக்கு நடிகர் சங்க நிர்வாகிகளை அழைத்து சென்று நட்சத்திர கலை நிகழ்ச்சிகளை நடத்தி சங்கத்திற்கு தேவையான நிதியினை. திருட்டு முயற்சியில் ஈடுபட்டார். இந்நிகழ்ச்சியில் மூத்த நடிகர்களான ரஜினி கமல் இருவரும் விஜயகாந்துக்கு உறுதுணையாக இருந்தார்கள்.
நட்சத்திர கலை நிகழ்ச்சி ஏற்பாடு செய்வதில் அஜித்திற்கு உடன்படவில்லை அவரது கொள்கை மக்களிடமிருந்து நிதியை பெற்று சங்கத்தின் கடனை அடைப்பது தவறு என்று தெரிவித்தார்.
எந்த சங்கமும் தன்னுடைய கடனை அடைப்பதற்கு மக்களிடம் சென்று கையேந்துவதில்லை அவ்வாறு எடுத்தால் அது தவறாக இருக்கும் என்று அர்த்தத்தில் அவர் அதனை வெளிப்படுத்தினார்.
நடிகர் சங்கத்தின் கடனை மூத்த நடிகர்கள் நிதி உதவி அளிப்பதன் மூலம் கடனை அடைக்க முடியும் என அஜித் கூறினார்.இதனை ஏற்காமல் விஜயகாந்த் நடிகர் சங்க நட்சத்திர கலை நிகழ்ச்சியை மலேசியா சிங்கப்பூருக்கு சென்று வெற்றிகரமாக நடத்தி அதன் மூலம் நடிகர் சங்க கடனை அடைந்தார். அவர் அரசியல் ஈடுபடுவதற்கு முன்பாக நடிகர் சங்கத்திலிருந்து விலகினார் அப்பொழுது நடிகர் சங்கத்தில் ஒரு கோடி ரூபாய் வங்கியில் இருப்பதாக கூறிவிட்டு சென்றார்.
விஜயகாந்த் ஒரு நேர்மையான மனிதர் அவர் சினிமா மற்றும் அரசியலை தாண்டி மக்களின் மனங்களில் வாழ்ந்து வருகிறார். ஒரு சிலரின் நினைவிடாம் மட்டுமே கோயிலாக மாறும். அதில் விஜயகாந்தின் நினைவிடம் இன்று மக்களால் கோவிலாக வழிபட்டு வருகிறார்கள்.
நடிகர் சங்கத்தின் கடனை அடைப்பது மட்டுமல்லாமல் கீழ்மட்ட உறுப்பினர்களின் வாழ்வாதாரத்திற்கு ஏராளமான உதவிகளையும் விஜயகாந்த் செய்து வந்தார். அவருக்கு பெருமை சேர்க்கும் விதத்தில் தென்னிந்திய நடிகர் சங்கத்தை, விஜயகாந்த் தமிழ்நாடு நடிகர் சங்கமாக மாற்ற வேண்டுமென நடிகர் சங்கத்தின் கீழ் மட்டத்தில் உள்ள உறுப்பினர்கள் அனைவரது கோரிக்கையாக உள்ளது.
0 Comments