செயற்கை கடற்கரையை உருவாக்கும் மாநிலம். ஏன் எதற்கு அதற்கான காரணங்கள்.

செயற்கை கடற்கரையை உருவாக்கும் இந்தியாவின் ஒரு மாநிலம் அதற்கான காரணங்களும் கடற்கரை உருவாக்க வேண்டிய அவசியம்.


இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் இருந்து 2 ஜூன் 2014 அன்று தெலுங்கானா ஆந்திரா என இரண்டாக பிரிக்கப்பட்டது.


இதனால் கடற்கரை பகுதிகள் அனைத்தும் ஆந்திர மாநிலத்திற்கும். கடற்கரை இல்லாத பகுதிகள் தெலுங்கானா பகுதியாகவும் பிரிந்து உள்ளன.



இந்தியாவில் மொழி வாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பொழுது 1952 ஆம் ஆண்டு ஆந்திர பிரதேசம் உருவாக்கப்பட்டது. நீண்ட காலமாக தெலுங்கானா ஹைதராபாத் நிஜாம் ஆட்சியின் கீழும் ஆந்திரா மதராஸ் மாநிலத்தின் கீழும் பிரிந்து இருந்தது.


இயற்கையாகவே இரு மாநிலங்களும் மொழிவாரியாக தனித்து நின்றன. தெலுங்கானாவில் உருது மொழியும் ஆந்திராவில் தெலுங்கு மொழியும் மக்கள் ஆட்சி மொழியாக பின்பற்றப்பட்டு வந்தது.

2 ஜூன் 2014 அன்று ஆந்திர மாநிலம் ஆந்திரா தெலுங்கானா என பிரிக்கும் பொழுது தெலுங்கானா பகுதியில் கடற்கரை இல்லாத சூழ்நிலை உருவானது. அப்பகுதி மக்கள் கடற்கரை பார்க்க மற்ற மாநிலங்களுக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.


இதனை கருத்தில் கொண்டு தெலுங்கானா அரசாங்கம் தெலுங்கானாவில் சேர்க்கையாக கடற்கரையை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. கடற்கரையில் நவீன விளையாட்டுகளும் பொழுதுபோக்கு அம்சங்களும் ஹோட்டல் ரெஸ்டாரண்ட் என கேளிக்கை விடுதிகளும் நவீன தொழில்நுட்பத்தை கொண்டு புதிய முயற்சியை மேற்கொண்டு வருகிறது.


இந்தியாவின் தெலுங்கானா மாநிலம் செயற்கை கடற்கரையில் புதிய முதலீடு மக்களின் வாழ்வாதாரத்திற்கு மிகுந்த பயனுள்ளதாக அமையும் என்று நம்பப்படுகிறது

Post a Comment

0 Comments