மாறிவரும் உலகத்தில் மனிதர்கள் தங்களின் உடலில் ஏற்படும் மாற்றங்கள்
பெரிய பிரச்சினையாக மாறி வருகிறது.
உலக முழுவதும் ஒருமித்த குரலில் எழுப்பப்படும் ஒரு கேள்வியாக வெப்பநிலை உயர்வது. பனிக்கட்டிகள் உருகி வருவதும் பேசப்படும் விவாதமாக மாறி வருகிறது. வெயில் காலமும் குளிர்காலமும் மனிதர்கள் தாங்கிக் கொள்ள முடியாத அளவிற்கு மாற்றங்களை கொடுத்து வருகிறது.
இந்த மாற்றங்கள் இயற்கையை மட்டுமல்லாமல், மனித உடலுக்கும் நேரடியாகவும், மறைமுகமாகவும் பல வகையான பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.
வெப்பம் அதிகமாக மனித உடலில் சீரற்ற தன்மைகள் ஏற்பட காரணமாக அமைகிறது. மனிதர்கள் தங்கள் அதிகம் விரும்பி உண்ணும் ஃபாஸ்ட் ஃபுட் உணவுகளால். எப்போதும் இல்லாத அளவிற்கு அதிகமான வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள். இது அவர்கள் சமநிலை ஆரோக்கியத்தில் இருந்து விலகிச் செல்கிறார்கள். உணவில் ஜீரண சக்தி குறைவது, உடலில் பல பிரச்சனைகளை உண்டு பண்ணும் கிருமிகளை அழிக்கும் நோய் எதிர்ப்பு சக்தி குறைத்து விடுகிறது
அதிகப்படியாக வெயிலில் வேலை பார்க்கும் நடுத்தர மட்டும் பொருளாதார பின் தங்கிய மக்கள். வெயில் அதிகரிப்பின் காரணமாக முதலில் உடலில் நீர் பற்றாக்குறை ஏற்படுகிறது. சரியாக உடலை பராமரிக்க தவறும் பட்சத்தில் நீர் பற்றாக்குறை அனைத்து நோய்களுக்கும் காரணமாக அமைந்து விடுகிறது. நோய் வந்த பிறகு தண்ணீர் அருந்துவது சிறந்ததாக முடியாது, நோய்க்கான மருந்து உட்கொள்வதே சிறந்ததாகும்.
வெப்பநிலை அதிகரிப்பதில் ஏற்படும் உடலில் நீரின் அளவு குறைந்து அதனால் ஏற்படும் நோய்களான தோல்கள் வறண்டு போய், தோலில் சிரங்குகள் ஏற்படும். இது உழைப்பில் கவனம் செலுத்துவதையும் மனநிலையும் பாதிக்கும். தவறான பாதைகளை உருவாக்கும். உடன் இருப்பவர்கள் குடும்ப உறவினர்கள், குழந்தைகளிடம் பாதிப்பை காட்ட வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம். ஆரோக்கியமான உடல்நிலை என்பது இன்றைய காலத்தில் பெயரளவில் உள்ளது. மனிதர்கள் ஆரோக்கியமான உணவுகளை தவிர்ப்பதும், பாதுகாப்பற்ற சூழ்நிலையில் வேலை பார்ப்பதும், தவறான உணவு பழக்கங்களை உட்கொள்வதாலும், மதுவிற்கு அடிமையாகி. ஆரோக்கியமான மனநிலையை அழித்து தான்தோன்றித்தனமான எண்ணங்களுக்கு இது வலியுறுக்கிறது.
காலநிலை மாற்றங்கள்:-
விவசாயத்தை மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. சரியான காலங்களில் மழை பெய்யாமல் இருப்பதும் வெப்பம் அதிகரித்து வருவதும், உணவுப் பொருள் உற்பத்தியில் மிகப்பெரிய தாக்கம் ஏற்பட்டுள்ளது. மக்கள் தொகை எண்ணிக்கைக்கு ஏற்றார் போல் உணவுப் பொருட்கள் விளைச்சல் இல்லாமல் இருப்பது. வறுமைக்கோட்டுக்கு கீழ் இருக்கும் மக்களின் பல பேருக்கு உணவு கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்படலாம்.
வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள மக்களின் ஆரோக்கியமான வாழ்விற்கு அவர்களுக்கு கிடைக்க கூடிய உணவில் உள்ள சத்துப் பொருட்கள் குறைந்து. அவர்களுக்கு ஊட்டச்சத்து குறைபாட்டால் ஏற்படக்கூடிய நோய்கள் உண்டாகும்.
பசுமைப் புரட்சியும், தொழிலாளர் புரட்சியும் கொண்டு வந்த. அனைத்து மக்களுக்கும் மூன்று வேளை உணவு சமமாக கிடைக்க வேண்டும் என்பதை, அடிப்படையாக வைத்து பசியினை தீர்த்த சட்டங்கள். இன்றைய காலநிலை மாற்றங்களால் மீண்டும் ஒருமித்த மக்களின் குரலாக புரட்சியின் தாக்கத்தை மக்களின் மத்தியில் பரப்ப வேண்டிய சூழ்நிலையில் வாழ்ந்து வருகிறோம்.
ஊட்டச்சத்து குறைபாடு:-
ஊட்டச்சத்து குறைபாடு தலை முறைகளைத் தாண்டி மக்களிடம் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. இதனை உணர்ந்து அனைத்து மக்களுக்கும் உணவு கிடைக்க ஆதிக்க மனப்பான்மை கொண்டவர்களிடம் இருந்த அரசியலமைப்பும், நீதிமன்ற சட்டங்கள். ஏழை நடுத்தர மக்களுக்கு எளிய முறையில் கிடைக்க அதிக முறை திருத்தங்களை சந்தித்துள்ளது.
இன்றைய தலைமுறையினர் உணவு பாதுகாப்பின்மை, காலநிலை மாற்றம் விழிப்புணர்வு,பாதுகாப்பில்லாத சூழ்நிலைகளை உருவாக்குவது, இயற்கை மீது புரிதல் இல்லாமல் இருப்பது. மீண்டும் பழைய ஆதிக்க மன நிலைக்கு மக்களை உணவு பற்றாக்குறை கொண்டு சென்று விடும். “வறுமை ஒரு நல்ல ஆசிரியர்” வறுமை நம் உடன் இருப்பவர்களையே நமக்கு எதிராக மாற்றிவிடும்.
உணவு விநியோக பாதிப்பில் கால நிலையை அடுத்து போர்களும் காரணமாக உள்ளது. போரின் வெற்றி, ஒரு நாட்டின் உணவு விநியோகத்தை தடுப்பதில் முக்கிய பங்கு ஆற்றுகிறது. நிலத்தை ரசாயனங்களாக மாற்றுவது, விவசாயத்திற்கு தேவையான நீரினை தடுப்பது. மக்களின் பொருளாதாரத்தை சமநிலை அற்றதாக மாற்றுவது. குறிப்பிட்ட மக்கள் பயன் பெறுவதற்காக போரினை தொடுத்து அதன் மூலம் அரசியலில் பெருமை தேடிக் கொள்வது. “அரசியல், ஆதிக்க மனம் கொண்ட சமூக மக்களின் குடும்பம்” இதற்கு எதிராக வறுமையை எதிர்த்தும் ஆதிக்கம் மனப்பான்மை அடக்குமுறைகளை எதிர்த்த மக்கள் தலைவர்களை மறந்தது ஆடம்பர பொருட்கள், கவர்ச்சிகரமான விளம்பரங்கள், கவர்ச்சிகரமான உணவுப் பொருட்களிடம் மக்கள் தொடர்ந்து அடிமையாகி வருவது காலநிலையை பாதிப்பது மட்டுமல்லாமல் அவர்களுடைய உடல் நலத்தையும் பாதிக்கின்றன.
ஊட்டச்சத்து குறைபாடுகளுக்கு எதிரான எழுச்சி மறைவதற்குள், உடல் நலம் சார்ந்த ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் உணவுகளுக்கு எதிரான விழிப்புணர்வுகள் அதிகம் வரத் தொடங்கி உள்ளன.
இன்று வறுமையில் இருக்கும் மனிதரை காட்டிலும், நோயில் இருக்கும் மனிதர்கள் அதிகமாக உள்ளன.
இது உணவு பொருளில் தன்னிறைவு அடைவதற்கு பதிலாக, செயற்கை நிறமூட்டப்பட்ட கவர்ச்சிகரமான உணவு பொருட்களின் சுவைக்கு அடிமையாகி. இன்று மக்களின் மனநிலை வாழும் வரை மகிழ்ச்சியாக வாழ வேண்டும்.என்ற குறுகிய மனப்பான்மையில் தலைமுறைகளை வஞ்சித்து வருகிறார்கள். காலம் கடந்து தான் செய்தது தவறுகளை உணரும் பொழுது அவர்களின் பாதிப்பு தலைமுறைகளை கடந்து விடுகிறது.
இன்று பிறக்கும் போது குழந்தைகள் நோய் உடன் பிறக்கிறார்கள். இதற்கெல்லாம் யார் காரணம். நம்முடைய உணவு முறைகள் அனைத்தும் காலநிலையை சார்ந்து இருக்க வேண்டும். அதனை மறந்து கவர்ச்சிகரமான சுவை ஊட்டப்பட்ட உணவில் பின் போனதன் விளைவு, குழந்தைகள் நோய் எதிர்ப்பு தன்மை குறைந்து பிறக்கின்றது.


0 Comments