சிவகார்த்திகேயன் நடிப்பில் A.R.முருகதாசன் இயக்கத்தில் கடந்த 5ம் தேதி வெளிவந்த மதராஸி திரைப்படம் குடும்பங்கள் கொண்டாடும் திரைப்படமாக 100 கோடி ரூபாய் வசூலித்து மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. இவருடைய படம் தொடர்ந்து 100 கோடி வசூல் செய்வது இது நான்காவது முறை. தமிழ்நாட்டில் குடும்ப கொண்டாடும் நடிகராக M.G.R, ரஜினி, விஜய், வரிசையில் தற்போது சிவகார்த்திகேயன் சேர்ந்துள்ளார்.
திரைப்படத்தை விமர்சனம் செய்யும் ரசிகர்கள் பெரும்பாலும் 2k தலைமுறை சினிமா ரசிகராக உள்ளனர். இவர்கள் சூர்யா விக்ரம் 90 தலைமுறை நடிகராக பார்க்கிறார்கள்.
சிவகார்த்திகேயன் யதார்த்தமான நடிப்பு இன்றைய தலைமுறை ரசிகர்களை சினிமாவின் பக்கம் திருப்பி உள்ளது. முன்னணி நடிகராக இருந்த சூர்யா, விக்ரம், சிம்பு படங்கள் தொடர்ந்து சொதப்பி வருவது 2k தலைமுறை ரசிகரின் ரசனையை அவர்களால் பூர்த்தி செய்ய முடியவில்லை.
2K தலைமுறையின் Super Star Sivakarthikeyan…..
சிவகார்த்திகேயன் தோல்விக்காக தமிழ் சினிமா முன்னணி நடிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டே இருக்கும் நேரத்தில். சிவகார்த்திகேயனின் முன்னணி இயக்குனருடன் இணைந்து வெற்றியை பதிவு செய்து வருகிறார். அந்த வரிசையில் மிகப்பெரும் இயக்குனர் என்று தமிழ் திரை உலகில் கொண்டாடப்பட்ட A.R முருகதாஸ் கடைசியாக வெளிவந்த படங்கள் தொடர் தோல்வியை சந்தித்ததால், Super Star வைத்து அவர் இயக்கிய தர்பார் திரைப்படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. இந்த தோல்வியின் மூலம் தமிழ் சினிமா உலகம் விட்டு ஹிந்தி திரை உலகத்திற்கு பயணம் செய்தார். அங்கும் அவருக்கு தோல்வியை கிடைத்தது. அதிலிருந்து மீள்வதற்கு மதராசி திரைப்படம் இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்து உள்ளது.
2K Super Star Sivakarthikeyan:-
சிவகார்த்திகேயன் திரை பயணத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவதற்கான அதிரடி திரைப்படம் கொடுக்க சரியான இயக்குனரின் தேவையை புரிந்து.
சிவகார்த்திகேயன், விஜய் வைத்து துப்பாக்கி படத்தை இயக்கிய A.R முருகதாஸ் இயக்கத்தில் நடித்த மதராஸி திரைப்படம் 100 கோடி வெற்றியின் மூலம் தமிழ் சினிமா நடிகர்களுக்கு அடுத்தது நான்தான் இங்கு என்று தெரிவித்துவிட்டார்.
GOAT திரைப்படத்தின் விஜய்யிடம் இருந்து துப்பாக்கியை வாங்கிய சிவகார்த்திகேயன் துப்பாக்கி சரியாக பயன்படுத்தி உள்ளார்.
தொடர் தோல்விகளை சந்தித்த A.R முருகதாஸ்-க்கு விஜய் கொடுத்த துப்பாக்கியை கொண்டு தமிழ் சினிமாவில் மீண்டும் முன்னணி இயக்குனராக மாறி உள்ளார்.
ஒரு துப்பாக்கி வைத்து இரண்டு வெற்றிகள். 100 கோடி ரூபாய் வசூலின் மூலம் நிரூபித்துள்ளார்.
சிவகார்த்திகேயனின் சராசரி மார்க்கெட் 100 கோடி ரூபாய் என்ற அளவிற்கு வளர்ந்துள்ளது.
0 Comments