அன்பை போதித்த இயேசுவும், அகிம்சை போதித்த காந்தியும், வீரத்தை போதித்த சுபாஷ் சந்திர போஸ்,அறிவை போதித்த அம்பேத்கரும். இம்மண்ணிலிருந்து மறைந்தாலும் அவர்களின் சிந்தனைகள் இம்மண்ணை காலத்திற்கும் நினைவில் வைத்துக் கொள்ளும்.

 இன்றைய இளைய தலைமுறைகள் ஜனநாயகத்தின் முழு பாதுகாப்பையும் பெறுகிறார்கள் இது அவர்களின் உரிமையை பாதுகாக்கும் செயலாக கருதப்பட்டாலும். தங்களுடைய கடமைகளை மறக்கும் சூழ்நிலைக்கு அவர்கள் தள்ளப்படுகிறார்கள். 

இன்றைய இளம் தலைமுறைகளின் ஒழுக்கம் சுய கட்டுப்பாடு பகுத்தறிவு எதையும் அறிவார்ந்த எண்ணங்களுடன் எதிர்கொள்ளும் சிந்தனைகள் குறைக்கும் மனநிலைக்கு அவர்கள் தள்ளப்படுகிறார்கள். காலத்தின் வேகத்தை இவர்கள் வேகமாக கடக்க செய்யும் ஒவ்வொரு முயற்சியும் தனது செயல்கள் மக்கள் மத்தியில் எதிர்மறை சிந்தனைகளை ஏற்படுத்தும் என்பது இவர்களுக்கு அறிந்திருக்கிறார்கள்.

தனது மகிழ்ச்சி தனக்கான உரிமை தனக்கான இடம் ஆளுமை என்பது தனக்கு மட்டும் உரியது என்ற குறுகிய மனப்பான்மையில் அவர்கள் தனது வாழ்க்கையை கடந்து செல்லும் சில நாட்களில் பகைவரை சம்பாதிக்கும் செயல்களில் அதிகம் ஈடுபடுகிறார்கள்.

போதைப் பொருள்கள் பழக்கத்தில் ஈடுபடும் அனைவரும் அதன் முடிவு என்ன என்பது அறியாமலேயே மகிழ்ச்சி என்ற ஒன்றிற்கு முக்கியத்துவம் தருகிறார்கள். சினிமாவில் காட்டப்படும் heroism மிகப்பெரிய எதிர்வினை இச்சமுதாயத்தில் ஏற்படுத்துகிறது. இம் மனநிலையுடன் தெரியும் ஒருவன் அனைத்து மக்களின் நலனுக்காகவும் என்றுமே நின்றது இல்லை.

அவர்கள் அனைத்து மக்களுடனும் பழகக்கூடிய மனநிலையில் இருப்பதில்லை அவர்கள் தனக்கான ஒரு மனநிலையில் சமூகத்தில் வாழும் பொழுது மற்றவர்களின் மனநிலை புரியும் தன்மையை அவர்கள் இழக்கிறார்கள். தன்னைப் போன்று தனது சகோதரனைப் போன்று எண்ணக்கூடிய தன்னை சுற்றி உள்ள மனிதர்களை தனது ஒரு சில போதை வஸ்துகள் மூலம் கிடைக்கக்கூடிய மகிழ்ச்சிக்கு அனைவரையும் எதிர்த்து செயல்படும் எண்ணங்களில் ஈடுபடுகிறார்கள்.

 இவ்வுலகில் வாழும் அனைத்து உயிரினங்களும் மனிதர்களைப் போன்று உணவு பாதுகாப்பு அடுத்து அன்பை எதிர்பார்த்து வாழ்கின்றார்கள்.

இதனை சக மனித சமத்துவ கண்ணோட்டத்துடன் பார்க்க வேண்டும்.

விலங்குகளிடம் இருக்கும் சிறு கருணை கூட சில மனிதர்களின் முன் நாம் எதிர்பார்ப்பது முட்டாள்தனம் என்பதை காலங்கள் சில நேரங்களில் உணர்த்தி விடுகிறது.

அன்பை போதித்த இயேசுவும், அகிம்சை போதித்த காந்தியும், வீரத்தை போதித்த சுபாஷ் சந்திர போஸ்,அறிவை போதித்த அம்பேத்கரும். இம்மண்ணிலிருந்து மறைந்தாலும் அவர்களின் சிந்தனைகள் இம்மண்ணை காலத்திற்கும் நினைவில் வைத்துக் கொள்ளும்.

இது சமூகம் எந்த ஒரு கடுமையான இக்கட்டான சூழ்நிலையில் தனி மனிதனின் மீது சட்டத்தையும் அதிகாரத்தையும் காட்டும் பொழுது. இச் சமூகத்தின் குரலாக அம்பேத்கார் அகிம்சை போதித்த காந்தியும் அங்கு முன் நிறுத்தப்படுவார்கள்.

தனிமனித ஒழுங்கினம் மீறும் செயல்களில் மனிதன் ஈடுபடுவதற்கு அடிப்படை காரணமாக இன்றைய காலகட்டத்தில் மது அருந்துதல் உள்ளது.


மதுவின் போதை படித்த அறிவையும் அவமானத்தின் முன் அடமானம் வைத்து விடும்.

இயற்கையில் மனித சமுதாயத்தில் இருக்கும் அறிவும் ஒழுக்கமும் கட்டுப்பாடும் ஒரு தலைமையை பின்பற்றும் பண்பும் கொண்டது. சமுதாய மாற்றங்களும் அதீத கல்வி வளர்ச்சியும் திறமையான மனிதர்கள் உருவாக்கிய அறிவு செல்வத்தை தன்னுள் புதைத்து விடாமல் அடுத்த தலைமுறைக்கு கொடுத்துவிட்டு சென்ற புத்தகங்களும். 


நான் இவ்வுலகில் சிறந்தவன் இல்லை.

நாம் இவ்வுலகில் சிறந்தவர்கள்.


இவ்வுலக வளர்ச்சி என்றும் தனிமனித வெற்றியை கொண்டாடுவதில்லை இது காலம் கடந்து காலத்தை வென்றவர்கள் படைத்து கற்றுக் கொடுத்த அறிவுக்கு நாம் செலுத்தும் ஒரு நன்றி கடன்.

தனி மனித போராட்டம் என்பது உளவியல் அறிவுக்கு அப்பாற்பட்டது. நாம் இன்று உலக வளர்ச்சியின் உச்சத்தில் இருக்கிறோம். அடுத்த கட்ட உச்சத்திற்கு இந்த உலகத்தை மேலே கொண்டு வர ஒவ்வொரு இளைஞரும் தனது கல்வியை அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

புரட்சிக்கான போராட்டமும் தனித்து நிற்கும் பொழுது அதன் வலிமையை குறைத்து விடும். பல மக்களின் அறிவுக்கு உரிமைக்கு போராடும் முன் நாம் மக்களின் பலவீனத்தை புரிந்து கொண்டு அவர்களுக்கு முன் நிற்க வேண்டும்.

இவ்வுலக அனைத்து புரட்சி போராட்டங்களும் தனது குடும்பத்தில் இருந்து பிறக்கும் என்பதை ஒரு மனிதன் உணரும் போது அந்த மனிதனை உலகம் தனது அனைத்துக் கொள்ளும் அவனின் கட்டளைக்கு மற்றவர்களை கீழ்ப்படிய செய்துவிடும்.

 இயற்கை என்றுமே படித்தவர்களை விட புதிர்களை புரிதலோடு புரிந்து கொள்ளும் புதியவர்களை அரவணைத்துக் கொள்ளும். 

இயற்கை என்றுமே முழுமையாக கற்றுக் கொள்ள விடாது.முதுமை மரணத்தை அரவணைப்பது போல. இயற்கை புதிய இளைஞர்களை அரவணைத்துக் கொள்ளும்.

நீங்கள் தேடும் வெற்றி என்பது இவ்வுலகில் மனித குலத்திற்கு செய்யும் சேவையை குறிப்பது. இவ்வுலக மக்கள் அதனை வெற்றியாக பார்த்தாலும். அந்த செயலை செய்யக்கூடிய மனிதர்கள் அதனை கடமையாக பார்க்கிறார்கள்.

கடமைகள் மனிதனை சுய ஒழுக்கம் சுய அறிவு சுய சிந்தனை கொடுத்து தனித்து நிற்க செய்கின்றது அது அவனை புகழ்ச்சிக்கு அடிமையாக்க விரும்பாது.

இருப்பது ஒருவருக்கு மட்டுமே கிடைத்து விட்டால் இல்லாத காலத்தில் இல்லாதவர்கள் இருப்பவர்களை இல்லாமல் ஆக்கி விடுவார்கள் என்பது அனைவருக்கும் அறிந்த ஒன்று.

வசதிகள் வரும்பொழுது தனக்கானதை சேர்க்கும் மனநிலையில் உள்ள மக்கள் மக்களுக்கு கொடுக்க வேண்டியதை முறையாக செலுத்த வேண்டும். அதனைத் தவிர்த்து மக்களிடம் நல்லவர்களாக காட்டும் பிம்பத்தை இயற்கை என்றும் அனுமதிக்காது. காலம் தனது வேகத்தை குறைத்துக் கொள்ள முயற்சிக்கும் பொழுது எதிர்பாராத செயல்கள் எதிர்பார்க்கும். கொரோனா போன்ற கொடிய நோய்கள் இம்மண்ணில் வருமுன் மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருக்க மாட்டார்கள். இது போன்ற செயல்கள் இனி வரும் காலத்தில் நடக்கும் என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. அது நோயின் மூலமாகவும் இருக்கலாம் அல்லது நவீன தொழில்நுட்பங்கள் மூலமாகவும் இருக்கலாம். மனிதன் அதீத செல்வ செழிப்பில் செலவுகளை எளிதாக செய்யும் பொழுது அவனின் மனநிலை இனி வரும் நவீன காலத்திற்கு எப்ப மாற்றிக்கொள்ள தவறினால் அவன் தனது நிலைமையை சமநிலைப்படுத்த முடியாத கால நிலைக்கு கொண்டு சென்று விடும்.

நாம் கற்றுக் கொள்ள விரும்பும் அனைத்து செயல்களும் முன்னவர்களின் வாழ்க்கை முறையை பின்பற்ற வேண்டும் என்பதை குறிக்கின்றது. இறைவன் மிகப் பெரியவன் அவனை அடைவதற்கு மிகவும் சிறந்த மனிதர்களை அவர் தேர்ந்தெடுக்கிறார். உங்களின் உயரங்களை நீங்களே உயர்த்திக் கொள்ளுங்கள் அறிவு அன்பு அவரின் பாதையை காட்டும்.


Post a Comment

0 Comments