விஷ்ணு விஷால் நடித்து தயாரிக்கும் திரைப்படம் ஆர்யான் படத்தின் டீசர் வெளியீடு இன்று மாலை 05.06 வெளியிடுவதாக படக்குழு அறிவித்துள்ளது.
புதுமுக இயக்குனர் பிரவீன்.K இயக்கத்தில் சாம் C.S இசையில் விஷ்ணு விஷால் ஸ்டுடியோ தயாரிப்பில் விஷ்ணு விஷால் நடித்த ஆர்யன் திரைப்படம் ஆகஸ்ட் மாதம் 31ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.
விஷ்ணு விஷால் தொடர்ச்சியாக பல வெற்றி படங்களை கொடுத்து வெள்ளித்திரையில் தனக்கான ஒரு இடத்தை தக்க வைத்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான ராட்சசன் திரைப்படம் க்ரைம் திரில்லர் கதையில் காவலராக மிகவும் அழகான நடிப்பை வெளிக்காட்டி இருந்தார்.
அந்த வரிசையில் Aaryan திரைப்படத்தில் க்ரைம் தில்லர் கதையில் காவல் அதிகாரியாக நடித்து வருகிறார். இத்திரைப்படத்தில் இவர்களுடன் முன்னணி கதாபாத்திரத்தில் வாணி போஜன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், செல்வராகவன் நடித்துள்ளார்கள். சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் செல்வராகவன் கதையில் நடித்திருப்பது படத்திற்கு கூடுதல் க்ரைம் தில்லர் கூட்டி உள்ளது.
ராட்சசனை போன்று மக்கள் ரசிக்கக்கூடிய க்ரைம் தில்லர் படமாக ஆர்யம் திரைப்படம் விஷ்ணு விஷாலுக்கு அமையும் என்று நம்பப்படுகிறது. ஆர்யன் திரைப்படம் தமிழ் மொழியை தாண்டி மற்ற மொழிகளிலும் வெளியிடுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
0 Comments