அரசு வேலை தேடும் இளைஞர்களின் கவனத்திற்கு;
இன்றைய இளைஞர்கள் படிக்கும் பொழுது வேலைக்கு செல்ல வேண்டிய அழுத்தத்துடன் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிப்பினை முடித்தவுடன் அந்த அரசு துறை சார்ந்த வேலையில் கவனம் செலுத்த கட்டாயப்படுத்தப்படுகிறார்கள்
இன்றைய சமுதாயத்தில் இளைஞர்களின் வாழ்க்கை வேலை ஒன்று மட்டுமே வாழ்க்கையை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளும் அதனைத் தவிர்த்து வேறு புதிய கண்டுபிடிப்புகள், திட்டங்களில் கவனம் செலுத்துவதை பெற்றோர்கள் விரும்புவதில்லை.
பெற்றோர்களின் பாசமும் அதன் மூட நம்பிக்கையும்
பெற்றோர்கள் அவர்கள் சந்தித்த மனிதர்கள் ஏற்பட்ட தாக்கத்தை இந்த சமுதாயத்தின் கண்ணாடியாக தனது குழந்தைகளிடம் அவர்கள் காட்டி வருகிறார்கள்.
இவர்கள் கல்வி கற்று குழந்தைகள் வாழ்வில் நன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும், கல்வி கற்றபின் வேலைக்கு செல்வது மட்டுமே வாழ்க்கையாகும் என்பதை தவறாக புரிந்த பெற்றோர்களுக்கு.
கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை அவரால் இந்தியாவின் உயர்ந்த பதவியான ஐஏஎஸ் ஐபிஎஸ் தேர்வு எழுதி பணிக்கு செல்லும் தகுதி இருந்தும் அத்துறைகளை அவர் தேர்ந்தெடுக்கவில்லை
அரசு பணி என்பது மிக கடினமான போட்டிகளில் தற்போது இருந்து வருகிறது இது இளைஞர்களின் படிக்கும் திறனின் வெளிப்பாடு இல்லை என்பதை இது மிகுதியாக காட்டுகிறது. அரசு வேலையில் சேர்ந்தால் வாழ்க்கையில் கஷ்டம் இருக்காது என்பது உண்மை. ஆனால் அவர்களின் திறமைகள் ஒருபோதும் அங்கீகரிக்கப்படுவதில்லை அவர்களை முழுவதும் பயன்படுத்திக் கொண்டு தனது வயது முதிர்ந்த காலத்தில் அவர்களை வெளியேற்றி விடும். இதற்காக அவர்கள் மிகப்பெரிய செலவு செய்து படித்து தனது செல்வத்தை அடமானம் வைத்து தனது திறமையை காட்ட வேண்டிய ஒரு இளைஞர் தன் வாழ்நாள் முழுவதும் அரசு பணியில் மிக குறைந்த ஊதியத்தில் வேலை பார்த்து வருகிறார்.
அரசு வேலை என்றால் லஞ்சம் என்பது எழுதப்படாத விதி- மாற்றப்படும் காலம் இது
இதன் அழுத்தங்கள் நீங்கள் தினசரி செய்தித்தாள்களில் அதிகம் பார்க்கும் லஞ்சம் வாங்கியதாக அரசு ஊழியர்கள் கைது இதன் உள்நோக்கங்களை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் வெளியே மனிதர்கள் அரசு வேலைக்கு சென்றால் பிழைத்துக் கொள்வான் என்று கூறினாலும், அவர்கள் மனதில் அரசு வேலை என்றால் லஞ்சம் வாங்கலாம் என்ற எண்ணம் மக்கள் மனதில் இருந்து கொண்டு தான் வருகிறது.
இன்றைய உலகம் நம் கையில் சுருங்கி விட்ட நிலையில், இவ்வுலகில் எங்கு குற்றம் நடந்தாலும் அதற்கு எதிரான கருத்துகள் மிக வலுவாக எதிரொலிக்கிறது இதனால் தவறு செய்பவர்கள் மிகுந்து குற்ற உணர்வுடனே இருந்து வருகிறார்கள். மக்கள் விழிப்புணர்வுடன் வாழும் காலத்திற்கு வந்து விட்டார்கள். உங்களுடைய வேலைக்கு நீங்கள் ஊதியம் பெறுகிறீர்கள், “எனக்காக வேலை பார்ப்பதற்காக தான் நீங்கள் இருக்கிறீர்கள்” என்று கேட்கும் கால இது. என்பதை மக்கள் தற்பொழுது நன்றாக புரிந்து கொண்டார்கள்.
மக்கள் விழிப்புணர்வில் தொலைக்காட்சிகளில் பங்கு
இன்றைய அரசியல் மாற்றங்கள், தொலைக்காட்சிகள் சிறு தவறு நடந்தாலும் அதனை ஒளிபரப்ப வேண்டிய கட்டாயத்தில் 24 மணி நேரமும் கழுகு பார்வையில் சுற்றிக்கொண்டு வருகிறார்கள். ஒருவன் நல்லது செய்தானோ கெட்டது செய்தானோ அதனை முதலில் மக்களின் பார்வைக்கு கொண்டு வந்து விடுகிறார்கள்.
மக்களின் உணர்வுகள் வெளிக்காட்ட தொலைக்காட்சி, செய்தித்தாள்கள் அவர்களுக்கு மிகவும் தேவைப்படுகிறது தங்களுக்கு உரிமைகள் மறுக்கப்படுவதையும் தடுப்பதையும் தனக்கான உரிமைகள் பெறுவதிலும் தொலைக்காட்சி செய்தித்தாள் மட்டுமே உள்ளன என அவர்கள் நம்புகிறார்கள். அவர்கள் அரசு ஊழியர்களை நம்ப மறுக்கிறார்கள். அதற்கு முதல் காரணம் லஞ்சம் அரசு வேலையில் சேர்ந்தாலே லஞ்சம் வாங்கலாம் என்ற மனநிலையில் உள்ள இளைஞர்களுக்கு இன்றைய அரசியலும் தொலைக்காட்சிகளும் அவர்களை சிறைக்கு கொண்டு செல்லும் என்பதை அனைத்து மக்களுக்கும் புரிய வைத்து விட்டார்கள்.
அரசியல் சதுரங்கத்தில் முதல் அடி அரசு ஊழியர்களுக்கு.
அரசு வேலை என்பது மக்களுக்கு சேவை செய்யும் ஒரு துறை அத்துறையை நீங்கள் தேர்ந்தெடுத்தால் உங்களுக்கான ஊதியம் நிர்ணயிக்கப்பட்டதாகவே இருக்கும் அதனை மனதில் வைத்துக் கொண்டு உங்களின் பணி சிறக்க வேலை செய்தால் நிம்மதியாக இன்றைய காலகட்டத்தில் வாழலாம்.
0 Comments